Posts

Showing posts from June, 2015

அடுத்தபிறவி அவள்

Image
கொஞ்சம்  உடல் முதிர்வில் பெரிய ஜீவன் அது  உள்ளத்தில் என்னவோ  ஒன்றுபோலதான்  பகிரும் புகைப்படங்களை  கொஞ்சம் எட்டவைத்துப்  எட்டிப் பார்த்தால்  மனதை இலேசாகப் பிசைகிற  உணர்வு உணரப்படும்  கொட்டும் மழையில்  தப்பிவந்து  வீடு நுழைகையில்  நனைக்கிற  தாழ்வாரத்தில் தேங்கிய ஒற்றை மழைத்துளி  அவள் நினைவு  வரையறையில்  வசப்படாததால்  இலக்கணம் ஒதுக்கி  இன்னும் வைத்திருக்கிறேன்  இதயத்தில் ஆழமாக காரணம் உண்டு காரியம் உண்டு  இப்பிறவி கழியட்டும்  எப்படியும் பிடிப்பதாக  சொல்லிவைத்திருக்கிறேன்  அவளது கரங்களை  அடுத்தபிறவியில் மறக்காமல்!!!

யாசகம்

Image
நேற்று பாட்டி இறந்து போனதற்கு ஊருக்கு போயிருந்த ஒருத்தியின் தோழியிடமிருந்து உதவிக்கோரல் மின்னஞ்சல் ஓன்று வந்திருந்தது இலக்கியமே வாழ்க்கையாகி இயல்பு வாழ்வைத் தொலைத்து நிற்கின்ற ஒருவருக்கு உதவி வேண்டி இன்றொரு காட்சி பதினோரு வருடங்களாக வறுமை வருத்த தேகம் மெலிந்து தேய்ந்து கொண்டிருக்கும் உறவிக்கு உதவ உய்து முடியாமலே கிடக்கிறது கொஞ்சம் கருணை சட்டமிட்ட கண்ணாடியில் சட்டைகளைந்த தேகம் பார்த்தால் எனக்காகவேணும் எங்கேயாவது யாரேனும் யாசகம் கேட்கக் கூடும்.!

துளிகள்

Image
நீ மௌனிக்கும் பொழுதெல்லாம்  மனம் திறக்க  ஆயத்தமாகிறாய் என்றுதான்  எடுத்துக்கொள்கிறேன் *** என்னில் எஞ்சியிருக்கும்  ஒரே மனிதம் உன் காதல் தான்! *** அவள் வருகையில்  நீ போய்விடுவதாய்  சொல்கிறாய் நீ வந்ததே  அவள் வந்தபின் தானே!! *** மானுட உச்சம் நீ! மிச்சம் நான்! *** ஐன்ஸ்டீனுக்கும் அவளுக்கும் பிறந்த அழகி நீ அறிவன் நான்! *** அடிவயிற்றில் தகிக்கும்  அரக்கப் பசி  எனது காதல்  நீ உணவு!! *** இருதயம் நொறுங்க  ஒரு இறுக்க கூடல்  முடிவில்  முடியுரசும் ஒரு   முன்னந்தலை முத்தம்! முக்தியளி எனக்கு! *** பெய்யும் துளிகளில்  நீ தான் தெரிகிறாய்    பார்வைக் கோளாறில்லை  பருவக் கோளாறுமில்லை  பாவைக் கோளாறு!! *** கவிதைகள் குவித்து  உன் காதல் மனது  திறப்பதுதான்  இனிமேல்  எந்தன்  எல்லாகாலத்  திட்டமும்...!! *** கண்களில்  காதலிச...

பழைய உரையாடல்கள்

Image
செய்வதற்கு ஒன்றுமில்லா  பெரும்பொழுதுகளில்  ஆட்டுக்குட்டியினை  சுற்றிவிழுங்குகிற  மலைப்பாம்பினை போல் ஆட்கொள்கிறது நின் நியாபகங்கள்  நேற்று நின்  நியாபகம் விழுங்கிய பொழுதினில்  அனிச்சையாய்  அணைக்க நேர்ந்தது  உன்னைப் பாதுகாப்பதுபோல்  உயிராய் பத்திரப்படுத்தியிருக்கும்  நம் உரையாடல்களில்  சில தொகுப்பை  கண்முன் உரைகள் விரிய  மனம் காட்சியை விரித்தது  கனவுகள் பிறந்தன  தொகுப்பிலில்லா  அந்த ரயில் பயணக் காட்சி  விரிந்தது விழிகள்தாண்டி  நீ வந்தால் சொல்லுவதாய்  சொன்ன காதலை நான் மரித்தபிறகாவது  மனதில் ஒலிக்க  இறந்த எந்தன் காதுகளில்  சொல்லிச்செல்வாயா  எனக் கேட்டுக்கொண்டிருந்தேன்  நீ தழுதழுத்துப் போனதாய்  சொல்லிக்கொண்டிருந்தாய்  முகத்தில் காற்று அறைகையில்  முடிகள் பிய்ந்து பறக்கையில்  உள்ளே ஓயாது காதல் பிழிகையில்  நானும் அவ்வாறே  அன்று இருந்தேன்  அ...

புதுப் புத்தகம்

Image
கையில் இருக்கிற ஒரு புதுப் புத்தகம் அப்பொழுதுதான் பிறந்த மிருதுவான குழந்தை தவழ்வதை போலிருக்கிறது மிக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அப்பொழுதுதான் காதலை ஏற்றுக்கொண்ட காதலியின் கைகளை முதன்முறை தழுவுகின்ற பரிசத்தை போலிருக்கிறது இறுதிமூச்சினில் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீரோடு இறக்கிற எல்லா நெருக்கமானவர்களின் கடைசி வார்த்தைகளின் கணத்தினை போலிருக்கிறது சமயத்தில் வாழ்வில் அத்தனையும் கைமீறித் தொலைந்தபிறகு இரட்சிக்க நீளும் இறைவனின் கருணையை பற்றுகின்ற உணர்வினைப் போலிருக்கிறது படிக்காது அலமாரியில் காத்திருக்கும் ஒவ்வொரு பழைய புத்தகமும் எந்நேரமும் விழித்தெழுந்து எமனிடம் சேர்ப்பிக்க காத்திருக்கும் எருமைகளின் இளவல்கள் பயமுறுத்துவது போலவும் இருக்கிறது.

குரங்குகளும் சில நினைவுகளும்

Image
இரெண்டொரு வருடங்களுக்கு முன்பு  அருவிகள் வழிந்தோடும் ஊரின்  அணைத்துக் கிடந்த இருளின் ஓரத்திலிருந்து  அடிக்கடி கைப்பேசி ஒளிர  கதைத்துக் கொண்டிருந்தோம் இருவரும் நீ அங்கும் நான் இங்குமாக   நீ, லட்டு பையன் என்னைப்போலவே  உன்னை துரத்துவதாய் சொல்லிக்கொண்டிருந்தாய்  உன்னுள் மட்டும் புதைத்து வைத்திருக்கும்  பெயர்சொல்லாத  இன்னும் சிலபேரும்  காதல் சொல்லியும், சொல்லாமலும்  காத்துக்கிடப்பதாயும் பகிர்ந்து கொண்டாய்  நாம் கதைக்கையில்  சன்னல்வழி  வந்த சாரலும்  என்னை நனைத்துக் கொண்டிருந்தது சில குரங்குகளும் விழித்துக் கிடந்தன   உன்னைச் சுற்றிவரும் எல்லோரையும் ரசிப்பதாயும்  பிடிப்பதாயும் நீ சொல்லிக்கொண்டிருக்கையில்  குரங்குகள் சப்தமிடத் தொடங்கின  மறுநாள் பெய்த மழையிலும்  மறக்காமல் தொடர்ந்தது நம் கதைப்பு  கொஞ்சம் அந்தரங்கம் பேசத்தொடங்கியிருந்தோம்  சுயமைதூனம் செய்கையில்  நின்னை பின்னிருந்து புணர்வதாக  நான...