புதுப் புத்தகம்


கையில் இருக்கிற
ஒரு புதுப் புத்தகம்
அப்பொழுதுதான்
பிறந்த மிருதுவான
குழந்தை தவழ்வதை
போலிருக்கிறது

மிக நீண்ட
போராட்டங்களுக்குப் பிறகு
அப்பொழுதுதான்
காதலை ஏற்றுக்கொண்ட
காதலியின் கைகளை
முதன்முறை
தழுவுகின்ற பரிசத்தை
போலிருக்கிறது

இறுதிமூச்சினில்
கைகளைப் பற்றிக் கொண்டு
கண்ணீரோடு இறக்கிற
எல்லா நெருக்கமானவர்களின்
கடைசி வார்த்தைகளின்
கணத்தினை
போலிருக்கிறது

சமயத்தில்
வாழ்வில் அத்தனையும்
கைமீறித் தொலைந்தபிறகு
இரட்சிக்க நீளும்
இறைவனின் கருணையை
பற்றுகின்ற உணர்வினைப்
போலிருக்கிறது

படிக்காது
அலமாரியில் காத்திருக்கும்
ஒவ்வொரு பழைய புத்தகமும்
எந்நேரமும் விழித்தெழுந்து
எமனிடம் சேர்ப்பிக்க
காத்திருக்கும்
எருமைகளின் இளவல்கள்
பயமுறுத்துவது
போலவும் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔