துளிகள்



நீ மௌனிக்கும் பொழுதெல்லாம் 
மனம் திறக்க 
ஆயத்தமாகிறாய்

என்றுதான்  எடுத்துக்கொள்கிறேன்

***

என்னில் எஞ்சியிருக்கும் 
ஒரே மனிதம்

உன் காதல் தான்!

***

அவள் வருகையில் 
நீ போய்விடுவதாய் 
சொல்கிறாய்

நீ வந்ததே 
அவள் வந்தபின் தானே!!

***

மானுட உச்சம் நீ!
மிச்சம் நான்!

***

ஐன்ஸ்டீனுக்கும்
அவளுக்கும் பிறந்த அழகி நீ

அறிவன் நான்!

***

அடிவயிற்றில் தகிக்கும் 
அரக்கப் பசி 
எனது காதல் 

நீ உணவு!!

***

இருதயம் நொறுங்க 
ஒரு இறுக்க கூடல் 

முடிவில் 
முடியுரசும் ஒரு  
முன்னந்தலை முத்தம்!

முக்தியளி எனக்கு!

***

பெய்யும் துளிகளில் 
நீ தான் தெரிகிறாய்   

பார்வைக் கோளாறில்லை 

பருவக் கோளாறுமில்லை 

பாவைக் கோளாறு!!

***

கவிதைகள் குவித்து 
உன் காதல் மனது 

திறப்பதுதான் 

இனிமேல் 
எந்தன் 
எல்லாகாலத்  திட்டமும்...!!

***

கண்களில் 
காதலிசை இருத்தி 
நெஞ்சினில் 
நின் நினைவோடு மயங்குதல்
மட்டுமே 
என் மனதுக்கு வாழ்தல் 

மற்றதெல்லாம் 
மட உடலுக்கு மட்டுமே!!   

***

விதைக்கும் போதெல்லாம் 
மிதிக்கிறாய் 

ஆழமாய் விதைகிறேன்!!!

***

திறக்காத மனது 
மூடாத 
கல்லறைக்கு சமம்...

***

காலை உணவுக்கு 
கொஞ்சம் கண்கள் 

மதியத்துக்கு 
மடிப்புள்ள உதடுகள் 

இரவுக்கு மட்டும் 
எல்லாம் 

இருந்தும் பட்டினி நான் 
இன்னும் பசிக்கிறது எனக்கு!!!

***

எளிதில் திறக்காதே 
இறுக்கிய மனதை 

காதல் வந்தாலும்
கவிதையும் முக்கியமெனக்கு!!

*** 

எனக்கு 
உன் காதல் 
கிடைக்காவிடினும் 
பரவாயில்லை 

உனக்கு 
என் போல் 
காதலன் கிடைக்கப்போவதில்லை 
என்ற அங்கீகாரம் 
கிடைத்தபின்பு!! 

***

நீ இதயத்தை 
எப்படி வேண்டுமானாலும் 
மறைக்கலாம் 

காதல் கொட்டுகின்ற 
கண்களை 
என்ன செய்வாய்!!

***

இறைவனை வேண்டி 
எல்லோரும் ஒரு நாள் 
விரதமிருக்கலாம் 

நான் உன்னை வேண்டி 
ஒரு ஆயுள் முழுக்க  
இருக்கிறேனே!!!

***

காய்ந்த ரொட்டி 
கடுத்த தேநீர் 
காதெல்லாம் காதல் 
மனதில் நீ 

இன்னும் குளிக்காத
எனக்கு 
இன்று விடுமுறையாம்!!!

***
நான் பெருங்கவிஞனோ!

நீ பிறக்காதிருப்பின்??

***
பரிணாமத்தில் 
நிமிர்ந்த மனிதக் குரங்குகள்  
என்போன்ற ஏனையோர் 

உன்போல் ஒருத்திகள் 
உலகில் இல்லாதுபோயிருப்பின்!!

***

நின் நினைவற்ற 
மணித்துளி உறக்கம் 
சாக்காடு 

விழித்தால்தான் பிறப்பு!!

***

சதைதாண்டிய மனம்  
சதையாலான மனங்களுக்கு 
சட்டென - ஏன் 
சாகும்வரைகூட
புரியாது போதல்

சாபம்!!!  

***

அன்பின் மொழி புரிய 
அறிவைக் கிளருபவள் நீ! 

அமைதியாய் இருப்பன் நான்!! 

***

காதல் புரிய 
கற்றல் அவசியமில்லை 

புரிந்தவர்க்கு 
புரிதலே அவசியமில்லை.

***

வாழ்தலுக்குதான் 
வரைமுறை

அதுவும் மனிதரூடே!!!

***

என் 
அடிப்படைத் தேவைகள் 
மொத்தம் ஆறு 

உணவு 
உடை 
உறைவிடம் 
எனக்கான நீ! 
உனக்கான நீ! 
நமக்கான நீ!

***

சர்வதிகாரம் ரசிப்பவன் நான்

காதலில் நீ 
என்னிடத்தில் மட்டும் 
செய்வதாய் இருப்பின்!!

*** 

என் காதலை 
சட்டைசெய்யாது  
நீ இறப்பின்  

உன் ஆத்மாவின் நிறம்
கருப்பாகாக் கூடும் 

***
தியான ஒளி நீ

தினம்  
தேடியலைபவன் நான்!!

***

உள்ளே ஒளிரும் 
உனக்கான காதலில் 

எனக்கான சக்தி 
சேகரிப்பவன் நான்!

***

நீ 
அமர்ந்து நகர்ந்த 
இடத்தில் 

அகல் விளக்கை 
ஏற்றுகிறேன் 

குலதெய்வம் தோன்றலாமிங்கு  
கோடி ஆண்டுகளுக்குப் பிறகாவது!!

***

இயற்பியல் 
வேதியியல் 
கணிதவியல் 
எல்லோருக்கும் 
புரிவதில்லை 
புடித்ததுவுமில்லை 

அதற்காக 
அதெல்லாம் 
இல்லாமலா 
போய்விட்டது 
இயங்காமலா
போய்விடாது 

பதில் போதும் 
என நினைக்கிறேன்!

***

எடிசனுக்கு தெரியவில்லை 
எலிப்பொந்தில் 
பூனையும் போகலாமென்று 

நீ எம்மாத்திரம்!!

***

சிறுவயதில் 
மிதிவண்டி பழக 
முனைந்த முனைப்போடுதான் 

உன்னையும் காதலிக்கிறேன் 

எனக்கு இப்போது 
எல்லா வண்டியும் அத்துப்படி

***

அன்றொரு 
அவளால் தொடங்கிய 
இவ்வாழ்வு
  
இன்றொரு 
இவளில்  
முடிவதுதான் 

நான் விரும்பும் 
வாழ்தல் சூத்திரம்.

***

தெளிந்த மன நிலையில்
கண் எறிகிறாய் நீ

கலங்கித் தெளிந்து
களங்குகிறேன் நான்!!

***

நான் பேசினால்தானே
இந்தக் கவிதையெல்லாம்

வாயை மூடிக்கொள்கிறேன்
என்கிறாய்

கண்களையும் சேர்த்து
என்கிறேன் நான்!

***

எனக்கு திருமணம்
நிச்சயிக்க போகிறார்கள்
என்கிறாய்

உனக்கில்லை
உன் உடலுக்கென்கிறேன் நான்!

***
உனக்கான
என் கவிதைகள்
அர்த்தமற்றவை என்கிறாய்

ஆண்டாள் பாசுரத்தையும்
அன்று எல்லோரும்
இப்படித்தான் சொல்லியிருப்பார்கள்!

***

இருளில்
ஒளிரும் நினைவு
நின் கனவு

ஒளியில்
தொலையும் கனவு
நின் நினைவு!!!

***

ஆதாமுக்கு
ஆப்பிள்

எனக்கு
உன் கன்னம்!

***

இனிப்பை தேடி
எப்படியாவது வரும்
எறும்பு மாதிரிதான்

உன்னைத்
தேடி வரும் நானும்

அனிச்சை செயல்!

***

நான் என்ன
பெரிய பேரழகியா

பொய் சொல்கிறேன்
என்கிறாய்

தாஜ்மஹாலுக்கு
எப்படித் தெரியும்
தனது பேரழகு?!!

***

உன் தலையுதிரும்
மயிர்க்கற்றைகள்
சேகரித்து வைக்கிறேன்
என்கிறேன்

"கிறுக்கா உனக்கு"
இது நீ

மயிலுக்கு
மயிலிறகு
மதிப்பற்றதுதான்

மனிதனுக்கு!!!

***

உனக்கு வேற வேலையே
இல்லையா

என்கிற உன்னிடத்தில்

என் இதய பலகையை
எடுத்து வந்து
காண்பிக்கிறேன்

அது இவ்வாறு உள்ளது
"நின் முழு நேரக் காதலன்"

***

வெளியே தழுவும்
குளிரும் நீ!!

உள்ளே தகிக்கும்
கனலும் நீ!!

***

நீ புடவையணிந்து
நட

நிர்வாணமாகட்டும்
நகரம்!

***

உன் காதுமடல்
உரசுகிறது
காற்று

கடுப்பாகிப் போகிறேன்
நான்!!

***

காலையில் எழுந்ததும்
கோபுர தரிசனம்
கோடி புண்ணியமென்கிறாய்

கண்விரித்து

செய்கிறேனே
இரவிலும் கூட என்கிறேன்!

***

வாசித்தவுடன்
வரிகள் மாறும்
உலகின்
ஓரே இரட்டை வரிப்புத்தகம்

உன் உதடுகள்!!

***

மேற்ப்படிப்புக்கு
என்ன ஆராய்ச்சி
செய்ய திட்டமென்கிறாய்

உன் வெட்கம்
ஆராயப் போகிறேன்
என்கிறேன்

உடனேயல்ல
என்பதற்குள்
உதிர்க்கிறாய்
நெளியும் வெட்கம் ஒன்றை!!

***

நானும் நீயும்
கூடினால் என்ன பிறக்கும்
என்கிறாய்

இரண்டு பெருங்கவிதைகள்
கூடினால்

ஒரு குட்டிக்
குறுங்கவிதையாவது
பிறக்குமென்கிறேன் நான்!!

***

மற்றவர்கள் சிரித்தால்
சிரிப்பு

நீ சிரித்தால்
மட்டும்

சிரிப் பூ!

***

அவித்து
குவித்து
அடுக்கப்பட்ட
அப்பம்

உன் கன்னம்

அலைகின்ற பூனை
என் எண்ணம்!

****

நீதான்
அடுத்த "அம்மா"வெனில்

அடிபணியும்

மு.க நான்!!

***

உன்னை
நாயென்பவரிடம்
உரக்கச் சொல்

நாய்
நல்ல மிருகம்!

***

வியர்வை
துளியில் தனிவது

விரக தாகம்!!

***

காற்று உள்ளிழுத்து
வாழ்ந்தது போய்

காதல்
உள்ளிழுக்க

வாழ்வது
வாலிபம்!

***

கொதிக்கின்ற
குமிழ் குழம்பு நீ

துடிக்கின்ற
நுனி நாக்கு நான்!!!

***

நீ சாதாரண பெண் தான்
நீ சொல்லுவதுபோல்

நீ அசாதாரண காதலியுந்தான்
நான் சொல்வதுபோல்

***

கடவுளுக்கு
படைத்து விட்டு
கடைசியில் உண்ணும்
படையல் போலதான்

உன் பார்வைக்கு
படைத்து விட்டு
பதிவேற்றும்
எனது கவிதைகளும்!

***

மூடிக் கிடக்கும்
புத்தகம் நீ

முயற்சித்துத் திறக்கும்
விரல்கள் நான்!!

***

சுண்டக்காய்ச்சி
சூடமர
பரணில்
பாதுகாத்து
வைத்திருக்கும்
பசும்பால் நீ!

எட்டியிழுத்துக்
குடித்துவிடவோ
கொட்டிவிடவோ

இங்கும் அங்கும்
இரவில் ஒளிரும்
பூனை நான்!!

***

இரவு நீளட்டும்

கனவோடு நீயுந்தான்!!

***

இருளில் ஒளிரும்

இரு ரேடியப் பண்கள்

நின் கண்கள்! .

***

நின் கருப்பு வெள்ளை
புகைப்படத்தில்

கலராய்த் தெரியுது
எனக்கு மட்டும்

காதல்!!

***

ஒரு வெறித்தனமான 
பாடலைக் கேட்கும்போது
உன் நினைவு
வருவது

எதை உணர்த்தவோ?!

***

உச்ச தருணங்களில்
நீ உச்சரிக்கும்
முருகா

கடவுள் அழைப்பா?
காதல் அழைப்பா?!

***

நீ
இரவில்
ஒளிர்கையில்

அணைப்பவன்

எப்படி இறைவன்?

இரையவன்!!

***

காய் முற்றிக்
கனிவது போல்

காதல் முற்றக்
கனிவது

காமம்!

***

நான்
பகலில் தொலைக்கும்
என்னை

இரவில்
தருகிறாய்
நீ

தேடிப் பிடித்து!!

***

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔