யாசகம்

நேற்று பாட்டி
இறந்து போனதற்கு
ஊருக்கு போயிருந்த
ஒருத்தியின் தோழியிடமிருந்து
உதவிக்கோரல் மின்னஞ்சல்
ஓன்று வந்திருந்தது
இலக்கியமே
வாழ்க்கையாகி
இயல்பு வாழ்வைத்
தொலைத்து நிற்கின்ற
ஒருவருக்கு உதவி வேண்டி
இன்றொரு காட்சி
பதினோரு வருடங்களாக
வறுமை வருத்த
தேகம் மெலிந்து
தேய்ந்து கொண்டிருக்கும்
உறவிக்கு உதவ
உய்து முடியாமலே
கிடக்கிறது கொஞ்சம் கருணை
சட்டமிட்ட கண்ணாடியில்
சட்டைகளைந்த தேகம் பார்த்தால்
எனக்காகவேணும்
எங்கேயாவது
யாரேனும்
யாசகம் கேட்கக் கூடும்.!
Comments
Post a Comment