பழைய உரையாடல்கள்



செய்வதற்கு ஒன்றுமில்லா 
பெரும்பொழுதுகளில் 
ஆட்டுக்குட்டியினை 
சுற்றிவிழுங்குகிற 
மலைப்பாம்பினை போல்
ஆட்கொள்கிறது நின் நியாபகங்கள் 

நேற்று நின் 
நியாபகம் விழுங்கிய பொழுதினில் 
அனிச்சையாய் 
அணைக்க நேர்ந்தது 
உன்னைப் பாதுகாப்பதுபோல் 
உயிராய் பத்திரப்படுத்தியிருக்கும் 
நம் உரையாடல்களில் 
சில தொகுப்பை 

கண்முன் உரைகள் விரிய 
மனம் காட்சியை விரித்தது 
கனவுகள் பிறந்தன 
தொகுப்பிலில்லா 
அந்த ரயில் பயணக் காட்சி 
விரிந்தது விழிகள்தாண்டி 

நீ வந்தால் சொல்லுவதாய் 
சொன்ன காதலை
நான் மரித்தபிறகாவது 
மனதில் ஒலிக்க 
இறந்த எந்தன் காதுகளில் 
சொல்லிச்செல்வாயா 
எனக் கேட்டுக்கொண்டிருந்தேன் 
நீ தழுதழுத்துப் போனதாய் 
சொல்லிக்கொண்டிருந்தாய் 

முகத்தில் காற்று அறைகையில் 
முடிகள் பிய்ந்து பறக்கையில் 
உள்ளே ஓயாது காதல் பிழிகையில் 
நானும் அவ்வாறே 
அன்று இருந்தேன் 
அந்த சிறுதூர 
ரயில் பயணத்தில் 

அன்றிலிருந்து 
இரெண்டாம் நாள் 
நீ உடைந்ததை 
உணர்த்துகையில் 
தெளிந்த காதல் 

மூன்றாம் நாளிலிருந்து
முடிவின்றி 
இன்னும் 
கலங்கிக் கிடக்கிறது 

காத்திருக்கிறேன் நானும்! 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔