அடுத்தபிறவி அவள்

கொஞ்சம்
உடல் முதிர்வில்
பெரிய ஜீவன் அது
உள்ளத்தில் என்னவோ
ஒன்றுபோலதான்
பகிரும் புகைப்படங்களை
கொஞ்சம் எட்டவைத்துப்
எட்டிப் பார்த்தால்
மனதை இலேசாகப் பிசைகிற
உணர்வு உணரப்படும்
கொட்டும் மழையில்
தப்பிவந்து
வீடு நுழைகையில்
நனைக்கிற
தாழ்வாரத்தில் தேங்கிய
ஒற்றை மழைத்துளி
அவள் நினைவு
வரையறையில்
வசப்படாததால்
இலக்கணம் ஒதுக்கி
இன்னும் வைத்திருக்கிறேன்
இதயத்தில் ஆழமாக
காரணம் உண்டு
காரியம் உண்டு
இப்பிறவி கழியட்டும்
எப்படியும் பிடிப்பதாக
சொல்லிவைத்திருக்கிறேன்
அவளது கரங்களை
அடுத்தபிறவியில்
மறக்காமல்!!!
Comments
Post a Comment