நீயேதான்!



நட்சத்திரங்கள் தெரிகின்ற 
பகலில் நடப்பது புதிது எனினும் 
குளிர் உறைய 
கரங்குவிய 
மரத்த கால்களை 
நகர்த்த எத்தனித்து நடத்தல் சுகம் 

வெண்பனி மூடிய 
வெளியெங்கும் உள்ளேற 
உறைந்தே கிடக்கட்டும் 
உள்ளுள்ள உள்ளம் 

வெப்பும் வெறுப்பும் 
ஆட்க்கொண்ட தினங்கள் 
அகண்டுபோய்
அரிதாகியிருக்கும் இப்பொழுது 
குளிர்ந்தே கிடக்கட்டும் 

தனுப்பு குறைந்து 
உடல் தடதடக்கையில் 
வருகின்ற நிலவு 
நீயேதான்!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔