பேருந்தில் நீ!!!



நமது பெரும்பாலான
உரையாடல்களின் போது நீ
பேருந்து பயணங்களில் இருக்கிறாய்..

சில நேரம்
இருக்கைகளில் அமர்ந்தவாறே
பல நேரங்களில் நின்றவாறே...

உன் பயணச் சுற்றம் குறித்த
சக பயணிகள் குறித்த
பெரும் ஆற்றாமை எனக்குண்டு...

நான் பார்க்க இயலாத
சந்திக்கத் தவிக்கிற
உன்னை
தினம் பார்க்கின்ற, சந்திக்கின்ற, உரையாடும் வாய்ப்பைப் பெறுகின்ற
அவர்கள் குறித்த
காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடது...

நீ
படிக்கட்டுகளில்
ஜன்னலோரங்களில்
நிலையற்ற இருப்பில் என
அசெளகரிய தருணங்களில்
பயணிப்பது குறித்து
வாழ்வு மீதான
பெருங்கோபம் எனக்குண்டு...

எனது பிரியத்தின் தேவதையை
தெருக்களில்,
நெரிசல் மிகுந்த பயணங்களில்
சுட்டெரிக்கும் கோடைகால ஒளிதனில்
தொடர்ந்து பயணப்பட விடுகிற
கடவுளை
தொடர்ந்து சபித்துக் கொண்டிருக்கிறேன்...

எனது சாபம் பழித்து
உன்னோடு பயணப்பட்டு
அல்லல் படட்டும்
கடவுள் என்ற அந்த
கண்ணுக்குப் புலப்படாதவன்...

இத்தனை
அசெளகரியங்களிலும்
என்னோடு நீ பேச,
உரையாட முயல்கின்ற
தருணங்கள்
எனக்கான,
நம் பிரியத்துக்கான ஆறுதல்...

மனிதர்களற்ற சாலைகளில்
பயணிகளற்ற பேருந்துகளில்
உன்னை நானும்
என்னை நீயும்
காற்று புக இடைவெளி மறுத்து
பிணைத்தவாறே பயணிப்பதாய்
இப்பொழுதெல்லாம்
எனக்கு கனவுகள் வாய்க்கின்றன...

நனவாயும் வாய்க்கட்டும்
அவை
விரைவில் நமக்கு..!!! 💕💕💕

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔