ஒருத்திகள்



தினம் கனவில் வந்து  
பிரியத்தின் 
யாழிசைக்கிறாள்
ஒருத்தி!

அதிகாலை காற்றினை
அவசரத்தில் கிழித்துக்கொண்டு  
பயணிக்கையில் 
சட்டென  
கடந்து போகிறாள் 
பொறுப்பான ஒருத்தி! 

ஆற்றாமை 
பொங்க 
அழுகை முட்டுகையில் 
ஆறுதல் 
தலை கோதுகிறாள் 
ஒருத்தி! 

எத்துணை முறை 
உடல் நலிகையிலும் 
அத்துணை வாஞ்சையோடு 
நலம் பேணுகிறாள் 
ஒருத்தி!

உன்னை 
மிகப்பிடிப்பதாலேயே 
உனதருகில் 
வருவதைத் தவிர்க்கிறேன்
என பேரின்பம் விதைக்கின்ற 
ஒருத்தி!

மழலை 
மங்கை 
மாதரென 
எத்தனை ஒருத்திகள் 
எத்தனை உணர்வுகள் 

அவள்களின்றி 
ஒரு அணுவும் 
அவையத்தில் அசையாது!.

மகளிர் தின வாழ்த்துக்கள்!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔