நீயென்பது



நீயென்பது 

எனக்கு 

உனது குரல்தான்! 


வள்ளுவ குறள் போல

உனது.. வரலாற்றுக் குரல்


குரல் வழி 

வளர்ந்த பிரியம் நமது


உன் குரலின் 

வெவ்வேறு அதிர்வுகளை  

அது கடத்தும்

உணர்வுகளையும்

உன்னைவிடவும்

ஆழமாய் அறிவேன்! 


உன் உடல்போலன்றி

குரல் 

அவ்வளவு

பரிட்சயமெனக்கு!


உன் முகம் குறித்த 

உருவம் குறித்த 

கற்பனைகள் 

இன்றும் உண்டு 

அது அறியாமையின் வெளிப்பாடு!


என் பிரியம் 

உன் மீதா 

உன் குரல் மீதா 

என்ற தவிப்பும்

இன்றும் உண்டு


உன் 

சுகம் 

சுகவீனம் 

அழுகை 

கோபம் 

காதல் 

அமைதி 

என எல்லா உணர்வுகளையும் 

கடத்தும் கடத்தி 

உனது குரல் 

உனக்கும் அவ்வாறே!


நமக்கிடையே 

தொலைவு அதிகரித்ததில் 

குரல் வசப்பட்டது. 

நன்மையே!


மொழியும், குரலும் 

இல்லையெனில் 

எங்கனம் சாத்தியம் 

இப்பிரியப்  பேருணர்வு!


எழுத்து கடந்து 

குரல் வழி 

அன்பு பரிமாறும் - நாம் 

கடிதத்திற்க்கு

முந்தைய காலம்

பின்னோக்கி சென்று 

முன் சேர்பவர்கள்!


நீயென்பது 

எனக்கு

எப்பொழுதும் 

உன் குரலே!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔