Posts

Showing posts from March, 2015

வாழ்வைப் புணர்தல்

Image
ஒரு ஊழிக்காலத்தில் இருளின் ஒளியில் அவளின் அருகாமையில்அவனுக்கும் அவனின் அருகாமையில் அவளுக்கும் தொடங்கியோ, தொடர்ந்தோ இன்னும் தொக்கிநிற்கும் உணர்வது கனவுகள் மேல் மிதக்க கன்னங்கள் தழுவிக் கிடக்க ஒருவராய் உயிர்த்துக் கிடந்த கோடி நொடிகள் மட்டும் கொண்ட கொண்டாட்ட வாழ்தலது அன்று பகல் இருண்டும் இரவு ஒளிர்ந்தும் புரிதல் விளக்கி புதியவைகள் சொல்லித்தந்து விலங்குகள் பல உடைத்து விவரம் புரிய வைத்தன வாழ்தல் குறித்து ஒருவரான இருவருக்கும் உடலைப் புணர்தல் உலகமறியும் அறிவைப் புணர்தல் அறிவீரோ? என வினாக்கள் எழும்பி விடையும் கிடைத்து அரியவகைப் புணர்தல் அத்தனையும் நிகழ்ந்தது கருவிழிகள் கலந்தபோது விழைந்த கதிரவன் ஒளிதனில் விலங்கு இச்சையில் உயர் மனிதம் புகுத்தி நிகழ்ந்த நிகழ்வில் அவள், அவன் கடந்து அதுவாக மற்றும் உணர்ந்திருந்தார்கள் உடல்கள் தனித்து உள்ளங்கள் புணர்தலும் உள்ளங்கள் தனித்து உடல்கள் புணர்தலும் பெரும்பாலும் நிகழும் - இப்பீடை உலகில் யாருக்கு வாய்க்கும் அறிவோடு புணரும் இவ்வரிய நிமித்தம் நிமித்தம் முடிந்து நிமிடங்கள் கடக்கையி...

கவிதைக்கலைப்பு

Image
தொழுகைக்கான அழைப்புமணி  ஒலிக்கையில் தொலைக்காட்சியில்  இந்துத்துவா தலைவரெனப்படும்    ஒருவர் ஒலிப்பெருக்கி முன்நின்று  ஒலியெழுப்பிக் கொண்டிருக்கையில் கானல் நீராய் கண்ணில் தெரிந்து  கடந்து போனதது   சாலையோரப் பூங்காவில்  தண்ணீர் தெரிப்பதற்கு நடுவே  விளையாடிக் கொண்டிருந்த  இரு சிறார்களுக்கிடையேயும்  இமைப்பதற்குள்  இலகுவாய் மறைந்து போனதது   பத்தொன்பதாம் மாடி  பணியறையில் இருந்து  பள்ளம் பார்க்கையில்  கண்ணில் அகப்பட்டு  கையில் சிக்காது  கரைந்து போனதது   இரவின் இருளில்  இருளின் ஒளியில்  ஓரமாய் ஒளிந்து  உயரமாய் உதித்து  எழுந்து உட்காருகையில்  ஏங்கவைத்து  மறைந்து போனதது  உதிக்கின்ற உனக்கு  உருவம் கொடுக்காத பொழுதுகள்   பசிக்கும் குழந்தைக்குத்தர  பால் சுரக்கா  தாயின் வலிக்குச் சமம் அலுவல் அவசரத்தில்  அலுப்பு சோம்பல்களில்...

அன்பு மகளுக்கு

Image
எனைப்போலவே  ஏதாவதொன்றை  நீ தினம் செய்வதாய்  அவள் சொல்லிக்கொண்டே  இருக்கிறாள்  உனைப்போலவே  தினந்தோறும்  நான் செய்யும் ஏதாவதை  உன்னிடத்திலும் - ஏன்  என்னிடத்திலுமே  சொல்ல யாருமில்லை நீ என்றாவது ஒருநாள்  வாசிப்பாய்  என  எழுதப்படும் இக்கவிதையைத்தவிர  உன்போல முகந்தாங்கிய குழந்தையையும்  குறும்புகள் புரிகின்ற  குழந்தையையும்  எங்காவது  கடந்து கொண்டே  இருக்கிறேன்  எனது கால்கள் வேகமாக  நகருகின்றன  உன்னை நோக்கி  நம் குறித்த  இரக்கமின்றி  மெதுவாக நகரும்  காலம் போலன்றி ஒரு பழைய  புகைப்படம் பார்த்து  நீ அழுவதாகக்  கூறுகையில்  வாழ்வையும்  வாழ்தலையும்  பழிக்கிறேன் நான்  உனக்கும் சேர்த்து  நாம் தள்ளியிருப்பதாக உலகம் நினைத்துக்கொள்ளட்டும்  மீண்டும் உடற் பிரிவின்றி  இணைந்திருக்க உள்ளம் இணைந்து  திரிவதாய்  நாம் நின...

அவள்களுக்கு அவன்களாய் மட்டுமிரு

Image
அவரை மணந்து கொள்ளும் முன் எத்தனை அவள்களிடம் பிடித்திருக்கிறதா  எனக் கேட்டார்கள்   தெரியவில்லை  குருட்டுபூனை விட்டத்தில்  பாய்வதுபோல்  முரட்டு மனிதர்களோடு  முந்தானை கோர்த்தனர்  பிடித்தல் குறித்தும்  பிடிக்காமைகள் குறித்தும்  எத்தனை அவள்களுக்கு  இன்று வரை  எவ்வளவு தெரியும்?! தெரியவில்லை  வாழ்வு குறித்தும்  வாழ்தல் குறித்தும்  வரிந்துகட்டி நியாயம் பேசும் இன்றைய நாம்  அன்றைய அவள்களின்  வாழ்க்கை வழி  ஒரு இன்பச் சுற்றுலாவாவது  போய்வரலாம் வ(ழி)லியுணர்கையில்  ஞானம் கிட்டக்கூடும்!  சாணம் தரைமொழுகி  சனத்துக்கு வடித்து கொட்டி  கரிதொட்டு  கரண்டியெல்லாம் விலக்கி  இடைவலித்தும்  இன்பம் உய்வித்த இசம் எனக்கான ஒரு அவள்  தொட்டிலில் ஒருபிள்ளை  தோளிலே ஒருபிள்ளை  அங்கமெங்கும் தொங்கித்திரியும்  அடுத்தடுத்த பிள்ளைகளென   சிதறிய பருக்கைகளை  சிரித்து உ...

உரத்தத்தோல் பாரதிகள்

Image
வெடித்துப் பொங்கும்  எரிமலைக் குழம்பினையும்  ஆவியாக்கவல்ல வெப்பம்  அறிவற்ற ஆணையின்  அடிபணிதலில்  அடிபடுகையில் வாய்க்கும் நாய்க்கும்!  உதாசீனத்தின் வெப்பும்  உள்ளம் வெறுக்க  அடங்குதலின் வெப்பும்  ஒருசேருகையில்  பொறுப்புகள் கண்முன் வருகின்  பிழைக்கத்தெரிந்த  பிணம்போன்றது வாழ்வு!  மோதிமிதித்து விட  முகத்தில் உமிழ்ந்துவிட  முடியா வாழ்வில்  எச்சில் பூசிக்கொண்டு  எருமையினும் மேலாய் வாழ்கிற  உரத்தத்தோல் பாரதிகள்  உயிர்விடுவது நலம்!  அங்கு ஒரு வணக்கம்  இங்கு ஒரு வந்தனம் என செயற்கையாய்க்   கூறிக் கூறி  குனிந்த முதுகெலும்பில்  குடித்தனம் நடத்துவதற்க்கு  கூத்தியாள் வேலை சுகம்! காரியத்திற்கு அண்ணன் என்பதுவும்  கடந்ததுவும் அடடே என்பதுவும் கரிய சொறிய நரிகளின்  கள்ளப் புத்தி   கைவந்தப் புத்தி!  மன்னித்தல் பொருட்டும்   மனிதம் பொருட்டும்   ம...

புரட்டியெடுக்கும் அவளது நினைவு

Image
நேற்று முதல் என்னை புரட்டியெடுக்கும் அவளது நினைவு அப்படித்தானிருக்கிறது இருதயத்தில் மெல்லென வழுக்கிக்கொண்டு இறங்கும் ஒரு கூரிய கத்தியைப்போல கொடும்பசியில் வயிற்றினை பீடித்திருக்கும் பசியுணர்வுபோல தலைக்குள் மட்டும் ஏதோ அமிலமழை பொழிதலைப் போல நேற்று முதல் என்னை புரட்டியெடுக்கும் அவளது நினைவு அப்படித்தானிருக்கிறது ஆவிபறக்க கொதிக்கின்ற நீரில் அமிழ்ந்து விட்டாற்ப் போல ஆகாயத்தின் மேலிருந்து வீழ்கிற அருவியின் மேலேறிக் குதிக்கிறாற்ப் போல நேற்று முதல் என்னை புரட்டியெடுக்கும் அவளது நினைவு அப்படித்தானிருக்கிறது தேகம் களைத்து தேடியெடுத்து எண்ணைத் தொடர்புகொண்டு என்னைச் சொன்னேன் அவளிடம் நான் சாதாரணமானவள் எனக்குப் போய் ஏன் இவ்வளவு யோசிக்கிறாய் என்றாள் ஏன் பெண்களுலகம் எப்போதுமே விசித்திரமாயிருக்கிறது??!! 

ஏன் பெண்களுலகம்?!

Image
நேற்று முதல் என்னை புரட்டியெடுக்கும் அவளது நினைவு அப்படித்தானிருக்கிறது இருதயத்தில் மெல்லென வழுக்கிக்கொண்டு இறங்கும் ஒரு கூரிய கத்தியைப்போல கொடும்பசியில் வயிற்றினை பீடித்திருக்கும் பசியுணர்வுபோல தலைக்குள் மட்டும் ஏதோ அமிலமழை பொழிதலைப் போல நேற்று முதல் என்னை புரட்டியெடுக்கும் அவளது நினைவு அப்படித்தானிருக்கிறது ஆவிபறக்க கொதிக்கின்ற நீரில் அமிழ்ந்து விட்டாற்ப் போல ஆகாயத்தின் மேலிருந்து வீழ்கிற அருவியின் மேலேறிக் குதிக்கிறாற்ப் போல நேற்று முதல் என்னை புரட்டியெடுக்கும் அவளது நினைவு அப்படித்தானிருக்கிறது   தேகம் களைத்து தேடியெடுத்து எண்ணைத் தொடர்புகொண்டு என்னைச் சொன்னேன் அவளிடம் நான் சாதாரணமானவள் எனக்குப் போய் ஏன் இவ்வளவு யோசிக்கிறாய் என்றாள் ஏன் பெண்களுலகம் எப்போதுமே விசித்திரமாயிருக்கிறது??!!