நனைதல்
சூடான தேநீரின்
ஆவி ஆடிகளில் படிய
ஜன்னல் வழி
மழையில் நனைந்த
சிறகினை உதறும்
சிறுகுருவி குறித்த
கவலையில் ஆழ்கையில்
மரத்தின் கிளையில்
மழையில் குளித்து
மகிழும் காகம்
மனம் மாற்றுகிறது
வீதியை ஈரமாக்கி
தெப்பமாக்கும்
மழையின் நீரில்
பிம்பம் பார்க்க
குடையின்றி நனைகையில்
மூப்பு கரைகிறது
மழையென்ன
நிலத்தை மட்டுமா
நனைக்கிறது, குளிர்விக்கிறது
நினைவுகளையும் தான்!
Comments
Post a Comment