எல்லாம் உதிர்ந்ததும்
நாம் பரஸ்பரம்
அறிவோம்
பன்னிரு ஆண்டுகளாக
உன் பால்யம் பகிர்ந்திருக்கிறாய்
கல்லூரி நாட்கள் கொஞ்சம்
கடந்த துயர்கள் கொஞ்சம்
கனவுகள் கொஞ்சம்
கோபம் கொஞ்சம்
ஆசைகள் கொஞ்சம்
ஆற்றாமைகள் கொஞ்சம்
தவிப்புகள் கொஞ்சம்
சந்தோசம், குதூகலம்
பயணங்கள்
பயணங்களின் பலன்கள்
என எத்தனையோ
பகிர்ந்திருக்கிறாய்
முடிவில்
நீயும் நானும்
ஒரே ஆத்மாவின்
வேறு உடல்கள்
என் கையில்
சிரிப்பாய்!
நீயும் நானும்
ஒரே ஆத்மாவின்
ஓரே மனங்கள்
என்ற பொழுதும்
சிரிப்பாய்!
இப்பொழுது
இறகுகளை
உதிர்க்கத் தொடங்கியிருக்கிறாய்.
எல்லாம் உதிர்ந்ததும்
பறவையாவாய்!
Comments
Post a Comment