நீயே ஒரு திருவிழா!
நீண்ட
வட்டவடிவ அழகு முகம்
அடிக்கடி ஆச்சர்யம்
வரையறுக்கும் அலைகள் போல்
இரு புருவங்கள்
குழந்தையின்
குதூகலத்தில்
அப்படிப் பேசும்
ஆச்சர்யக் கண்கள்
மெத்தென உப்பிய
அப்பொழுதுதான் வெந்த
வெதுப்பக
ரொட்டிக் கன்னங்கள்
படைப்பின்
பெரும் மெனக்கடல் தெரியும்
சிறு உதடுகள்
நாடிப் பகுதி,
கவனித்தால்
கவனம் சிதறும்
ஆபத்தான
அழகிய பள்ளத்தாக்கு
நீயே
ஒரு திருவிழா
உன் முக தரிசனமே
எனக்கு
அடிக்கடி நிகழும்
அலுக்காத
திருவிழாக் கொண்டாட்டம்!
Comments
Post a Comment