மேற்ப்படி!! மேற்ப்படி!!

தொடர்ச்சியாக செல்போனில் உரையாடிவிட்டு, இன்று அவளை நேரில் சந்திக்க போவது கிளர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது குமாருக்கு. "இன்னைக்கு போயா இப்படி மழை அடிச்சி ஊத்தணும்" கொட்டித் தீர்க்கும் மழையை நொந்து கொண்டான் குமார். மழையில நனஞ்சிகிட்டே அவள முதல்ல பாக்குறது கௌதம் மேனன் பட ரொமாண்டிக் சீன் மாதிரி இருக்கப்போவதாக கற்பனையில் சிறகடித்துக் கொண்டே, அவள் வருவதாக சொன்ன ஐஸ்க்ரீம் பார்லருக்கு வண்டியினை விரட்டிக் கொண்டிருந்தான். குமார் 29 வயதான இளைஞன், வேலைமாற்றலாகி திருச்சி வந்திருந்தான். நகரத்தின் நடுவில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான். ஆறுமாத திருச்சி வாசம். அறையில் வயதில் மூத்த இரு நண்பர்களும் நகரத்தை பற்றியும், இன்னபிற பேச்சுலர் சமாச்சாரங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டிருந்தார்கள் ஆறுமதமானபோதும். போதும் என்று சொன்னாலும் விட மாட்டார்கள் என்பது விளங்கியதால் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு வரலாம் என்று அருகிலிருந்த மெஸ்ஸுக்கு போகையில்தான் அவளை முதன் முதலாகப் பார்த்தான். அது ஒரு மார்கழி மாதம். தமிழ் சினிமாவில் வரும் ஹீரோயின் இன்ட்ரோ காட்சி மாதிரி. ஒரு வளைய...