வதந்தி
இரண்டு குழந்தைகளுள்ள
புகைப்படத்தினை
முகப்புப் படமாக பதிந்திருந்தேன்
இணையத்தின் குழுமமொன்றில்
ஹே! யாரிந்த இரெண்டாவது குழந்தை?
ஒளிர்ந்தது செய்தி
நண்பனின் மனையாளிடமிருந்து
எங்கள் குழந்தைகள்தான்
அள்ளிவிட்டேன்
அமட்டுச் சிரிப்போடு
சற்றுநேரத்தில்
நண்பனிடமிருந்து
மாமா! சொல்லவேயில்லையே!
என்று ஒளிர்ந்த செய்திக்கு
கண்ணடிக்கும்
மஞ்சள் பொம்மையை அனுப்பிவிட்டு
கடமைகளில் மூழ்கிப்போனேன்
பதிந்த குழந்தையைவிட
பலமடங்கு வளர்ந்திருக்கும்
இந்நேரம் இணைப்பில்
எனக்குப்பிறக்காத
இரெண்டாவது
எழில் குழந்தை!
Comments
Post a Comment