காரணம் பொருட்டே!
மிகக்குளிர்ந்த அறையினை
விட்டு வெளியேறுதல்
வெப்பு மிகுந்த
வெளியின் உள்ளேருதல்
காரணம் பொருட்டே
ஆடை நனைய
அங்கம் பிசிபிசுக்க
கண்ணுக்கு மறைந்தாலும்
காற்றில் வசிக்கும்
வெப்பு மிகுந்த
வெளியின் உள்ளேருதல்
காரணம் பொருட்டே
கொஞ்சம் நடந்து
கடைக்கோ, உணவகத்துக்கோ
காரணம் கண்டறிந்து
கடையேறுதல்
பசியாறுதல் எல்லாமும்
காரணம் பொருட்டே
சினிமாக்களில் லயித்து
சிற்றின்பங்களில் சுகித்து
சிலகணங்கள் தொலைத்தாலும்
அடிக்கடி அந்தி சாய்கையில்
வெளியில்
வேண்டாது உள்ளேருதல்
வேடிக்கையான
காரணம் பொருட்டே
தனித்திருத்தலும்
தனித்திருத்தல் தவிர்த்திருத்தலும்
தரணியெங்கும் சுற்றியலைதலும்
தவிர்க்க முடியா
வெப்பு மிகுந்த
வெளியின் உள்ளேருதல் போல்
வேண்டா
பெருங்காரணம் பொருட்டே!
Comments
Post a Comment