வட்டத்தை சுருக்குதல்



நொடிகளாய் சிதறி
நிமிடங்களாய்க் கரையும்
ஏதோவொரு மணித்துளியில்
பிறக்கிறது நின் சிந்தனை!

அறிமுகமும்
அன்றாடங்களும்
பேசிக்கழிந்து போன பகுதி
கடந்த காலமாகையில்
நிகழ்காலத்தில் மீதமிருக்கிறாய்
நீ மட்டும்!

காலங்களை பிணைக்க
கடுமையாய் எத்தனிக்கையில்
குழப்புவதாய்க் குறுக்கிடுகிறது
வரையறுத்த விதிகள்
உனக்குமட்டும்
நின் சிறு வட்டத்தில்!

இருவருக்கும் வட்டமுண்டு!

நீ உள்ளேயும்
நான் எப்பொழுதும்
வெளியேயுமாயிருக்கும்
வட்டம் இருவருக்குமுண்டு

வட்டத்தை சிறிதாக்குவதில்தான்
நீ மகிழ்வாயெனில்
நினக்காக வாழ்வையே சுருக்குமெனக்கு
வட்டத்தை சுருக்குதல்
என்றும் பெரிதல்லவே!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔