கணவனாதலால்!!



அடுத்த தினம் 
ஆரம்பித்த பொழுதிலும் 
விழித்திருந்தேன்
உபயம் ஒரு 
உலகத் திரைப்படம்! 

நீட்டி முழக்கி - உறக்கத்தை 
நெருங்கிய பொழுதில் 
அணைக்க மறந்த 
அலைபேசி ஒலிகேட்டு 
ஆராய்ந்தது கை! 

அனுப்பிய சான்றிதல்கள் 
குழப்பம் விளைவித்ததால்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 
அட்டையின் நிலைமை குறித்த 
அர்த்த ராத்திரியில் வரும் 
அவசர மின்னஞ்சல் அது! 
 
தீர்க்கமற்று எல்லாவற்றிலும் 
தெளிவில்லாதவளாய் 
இருப்பது கண்டு 
தெறித்த கோபம் 
அடுக்கடுக்காய் காரணங்களை 
அடுக்கிக் குவித்தது
அதனால் இரத்தம் கொதித்தது    

உறக்கம் மறந்து 
உயர்ரத்தம் அழுத்தப் பாய்ந்ததில் 
விளைந்ததென்னவோ 
கைகலப்பின்றி - வெறும்  
கவிதை களோபரம்தான்!

கணவனாதலால்!!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔