நேசம் தொலைத்த மனிதர்கள்
நிழல் பின்தொடர
நடந்து வந்து
அறை நுழைகையில்
ஜன்னலில் காத்திருக்கிறது
ஒரு அக்கா குருவி
இந்த அரபு தேசத்திலும்
ஆச்சர்யமாய்!
மஞ்சள் தங்கமாய்
மணல் தகிக்கும் தேசத்தில்
சிறுவயதில்
மீன்பிடித்துப் போட்டது
போலொரு
மீன்பிடித்துப் போட்டது
போலொரு
பூனையினை பார்க்கையில்
கானல் நீராய்
புலப்பட்டு மறைகிறது
புரிதல் ஏதோ!
கழிப்பறை சன்னல்களை
காற்றுபோக திறக்கையில்
எங்கிருந்தோ
பறந்து நுழையும்
ஈசலுக்கும் தெரிந்திருக்கிறது
எனக்கு தெரியாத
ஏதோவொன்று!
இரவில் நுழைந்து
இருளில் கடித்த எறும்புதான்
இடித்துச் சொல்லிற்று
தேச வித்தியாசமெல்லாம்
நேசம் தொலைத்த மனிதர்கள்
உங்களுக்குத்தானென்று!
Comments
Post a Comment