நரைத்தமுடி கத்தரிக்கையில் சிகை கோதியவாறு கடக்கின்ற சிறுமி சொல்கிறாள் இளமைக்கான இலக்கணம்! சோறு கொஞ்சம் பசுநெய் கொஞ்சம் உப்பு கொஞ்சம் பருப்பு கொஞ்சம் சுவைக்கு வேண்டும் அம்மா கை பிசைதல்!!! என்றோ சந்தித்த உன் நினைவின் நீட்சி ஓன்று போதும் இப்பிறவிப் பெருங்கடலை பேரன்புடன் நீந்திக்கடக்க! எங்கோ வீட்டின் மூலையில் தேய்ந்து ஓய்ந்து கிடக்கின்ற உன் பழையப் புகைப்படம் பார்த்தபின் கடக்கிற அந்த ஒருநொடி தான் என் ஒரு யுகவாழ்க்கை! !
Posts
Showing posts from November, 2015
முப்பது நொடிகள்
- Get link
- X
- Other Apps

புழுதிப் பறக்கிற சாலையில் காற்றில் கலைகிற சிகைதிருத்தியவாறு வருகிற உனைப் பார்த்த அந்த நொடி! தோழியுடன் சிரித்து உரையாடிக் கொண்டிருந்த நீ தலையுயர்த்தி தன்மையாய்ப் பார்த்த குளிர் நாளின் அந்த நொடி! மழையும் புவியும் இணைந்து இசைக்கிற பின்னிரவில் நின் நினைவு போர்த்தி காதல் பிரசவித்த அந்த நொடி! எதிரில் நீ அமர்ந்திருக்க என்னமோ உயிர் சூடேறி உருகும் ஐஸ்கிரீம் தோற்க உருகி உதிர்ந்த அந்த நொடி! எப்போதோ நீண்ட எதார்த்த உரையாடலில் அவ்வப்போது சிறு மௌனம்சூடி நீ "ம்ம்ம்" சொல்லிய அர்த்தம்பொதிந்த அந்த நொடிகளென முப்பதுநொடிகள்தான் தேறும் இதுவரை வாழ்ந்த மொத்த வாழ்வில்.
பெய்யெனப் பெய்யும் மழை
- Get link
- X
- Other Apps
காரோடும் வீதிகளில் கணமற்ற படகுகளும் பயணித்தல் காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சிதான்! தொட்டிவைத்து மீன் வளர்த்த வீடே மீன்களுக்கு தொட்டியானது கூட ரசிக்க கூடியதுதான்! வறண்ட ஆற்றில் நிறைந்து ஓடும் வெள்ளம் வரலாற்று அவசியந்தான்! மின்சாரம் பொய்த்த இரவில் சம்சாரம் புலம்ப அகல் விளக்கின் ஒளியில் அண்ணம் உண்ணுதல் கூட அழகுதான்! குடிநீரையும் கழிவு நீரையும் கலந்து குடிப்பது மலங்கழிக்க இடமின்றி மழங்க விழிப்பது நேற்று நிலத்தில் கட்டிய வீட்டுக்கு நீந்திச் செல்வது கனவு இல்லம் கரையப் பார்ப்பது ஆயுசு உழைப்பில் சேர்த்த செல்வம் அழியக் காண்பது பொதுநலமற்று சுயநலத்தோடு அடிமனதையும் அரசுகளையும் தொடர்ந்து வைத்திருக்கும் இயற்கையை அழிக்கிற நம் பொருட்டுதானெனில் பெய்யெனப் பெய்யும் மழையும் பேரழிவும் அழகுதான் அவசியந்தான் - நம் . அறிவுக்கு எட்டுமட்டும்!
நர்மதா குட்டிகள்
- Get link
- X
- Other Apps

காலைக் கடமைகளுக்கு பிறகு புதிதாய் வாங்கிய நீள் செவ்வக வடிவ உயர் தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்க்கத் தொடங்குகிறாள் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சென்ற வீட்டில் தாத்தா,பாட்டியோடிருக்கும் நான்கு வயதான நர்மதா குட்டி கண்களுக்கு நல்லதில்லையென பாட்டி தொலைக்காட்சியினை அணைக்கையில் கொஞ்சம் முகம் வாடித் தொடங்குகிறாள் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியோடு தனது உரையாடலை கதவுகள் பூட்டியே கிடக்கும் அண்டை அயலாரின் நகரத்தில் கார்ட்டூன் கதைமாந்தர்கள்தான் நண்பர்களாதலால் அவர்களோடு அவளுக்கிருக்கிறது ஒரு அதிசய உலகம் அலுப்போடு பாட்டியின் அவசர உணவூட்டலிலோ அங்கலாய்க்கும் தாத்தாவின் அயர்வு விளையாட்டிலோ ஒருபோதும் நிறைவதில்லை நர்மதா குட்டிக்கு வயிறும்,மனமும் உயர்ரக ஆடைகளும் உணவுப் பண்டங்களும் நிரம்பக் கிடைக்கும் உலகில் அம்மையும் அப்பனும் அருகிலிருப்பது ஏன் இத்தனை அரிதாயிருக்கிறது ...
தீபாவளி
- Get link
- X
- Other Apps

பட்டாசுகளின் சத்தங்களை பார்த்து தெரிந்துகொள்ளும் முதல் தீபாவளி இது! முகநூல்தான் முதலில் சொன்னது இந்த தீபாவளி தினத்தை - ஏன் வாழ்த்துக்களையும் கூட! முகம் மட்டும் தெரிந்த அகம் அவ்வளவாய் தெரியாத அத்துணை பேரும் வாழ்த்த ஆன்லைனில் கழிகிறது அந்நியபூமியில் தீபாவளி! ஆருயிர் நண்பர்களும் அளவளாவும் உறவுகளும் புத்தாடை தழுவும் பூரிப்பு உணர்வும் தொட்டுப் பட்டாசுகள் வெடித்து தொல்லை செய்த பொழுதுகளுமாய் கடக்கும் பால்ய தீபாவளி! பருவத் தீபாவளி! இன்னும் கழிந்து கொண்டுதான் இருக்கிறது கனவில் ஒவ்வொருவருடமும் உலகில் எங்கிருப்பினும்!
மாமி
- Get link
- X
- Other Apps

அலுவலகம் முடித்து சரியாக 5 மணி அந்த அரசுப் பேருந்தில் வருகிற வாடிக்கை சுந்தருக்கு. அந்த 1B நம்பர் பேரூந்து கொஞ்சம் விசேஷம். சுந்தருக்கு மட்டுமல்ல இசையை, விரும்புகிற எல்லோருக்கும். அந்த பேரூந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு இசையின் மீது பேராசை, பிரயாசை இருக்கவேண்டும். எப்போதும் தொடர்ச்சியாக திரையிசை பாடல்களையோ, சில இசைக்கருவிகள் மட்டும் ஒலிக்கும் இசையையோ எப்போதும் ஒலிக்கவிட்டு பயணிகளை கட்டி வைத்திருப்பர். அன்றைய அந்த ஒருமணி நேர பயணம் அவனது வாழ்க்கையில் மற்றுமொரு மிக முக்கிய நிகழ்வாகப் பதியப்போகிறது தெரியாமல் அன்றும் வழக்கம்போல் இசைப்பேரூந்துக்காக விரைந்து கொண்டிருந்தான். சுந்தர் ஒரு பட்டதாரி வாலிபன். சராசரி உயரம், நல்ல நிறம், பெண்களை தலைதிருப்பிப் பார்க்க வைக்கிற, ஆண்களை கொஞ்சம் பொறாமைப்பட வைக்கிற அழகன். கிராமத்தில் பின்னணியிலிருந்து சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்த புது ஆத்மா. இரண்டாம் தரமாக ஒரு மோட்டர் சைக்கிளை வாங்கியிருந்தான். ஆனாலும் இந்த இசைப்பேரூந்துக்காக அதை அவன் அலுவலகப் பயணத்துக்கு ...
அரை ட்ரவுசர் போட்ட அப்பத்தா!!!
- Get link
- X
- Other Apps

புராண, இதிகாசங்களின் படி சொல்லவேண்டுமானால் கலியுகத்தில் இருக்கிறோம். கொஞ்சம் நவீனமாக சொல்ல வேண்டுமென்றால் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம். செல்போன், ஐ பேட், லேப்டாப், என ஏதோவொன்று குடும்ப உறுப்பினர்கள் போல, நண்பர்கள் போல் இல்லையில்லை நகமும் சதையும் போல நம்மோடே ஒட்டிக்கொண்டு இருக்கிறது எங்கும் எப்போதும். உங்களது, எனது என எல்லாரது நடவடிக்கைகளும் தினசரியாக எங்கோ பதிவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன இந்த டிஜிட்டல் யுகத்தில். நமது அந்தரங்கத்தை யார்வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எட்டிப்பார்க்க வழிவகை செய்திருக்கிறது இந்த நவீன மின்சாதனங்களின் புரட்சி. மிகுந்த அறிவாளிகளுக்கு எல்லா நிறுவனங்களிலும் பிழைப்பு இருக்கிறது. கொஞ்சம் சுமாரான அறிவாளிகளுக்கு இது கஷ்ட காலம்தான். கடந்த காலத்தில் எல்லா நிலை மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு பிழைப்பு, வாழ்வியல் ஆதாரம் ஓன்று இருந்தது. எங்கள் ஊரிலிருந்த இறந்தவர் உடல்களை எரிக்கும் சகோதரர் இறந்தபிறகு அந்த வேலையை செய்கின்ற ஆள் இல்லையென சொன்னார்கள். இப்படி நிறைய சிறுதொழில் செய்தவர்கள் சுவடின்...