தீபாவளி
பட்டாசுகளின் சத்தங்களை
பார்த்து தெரிந்துகொள்ளும்
முதல் தீபாவளி இது!
முகநூல்தான்
முதலில் சொன்னது இந்த
தீபாவளி தினத்தை - ஏன்
வாழ்த்துக்களையும் கூட!
முகம் மட்டும் தெரிந்த
அகம் அவ்வளவாய் தெரியாத
அத்துணை பேரும் வாழ்த்த
ஆன்லைனில் கழிகிறது
அந்நியபூமியில் தீபாவளி!
ஆருயிர் நண்பர்களும்
அளவளாவும் உறவுகளும்
புத்தாடை தழுவும்
பூரிப்பு உணர்வும்
தொட்டுப் பட்டாசுகள் வெடித்து
தொல்லை செய்த பொழுதுகளுமாய்
கடக்கும்
பால்ய தீபாவளி!
பருவத் தீபாவளி!
இன்னும்
கழிந்து கொண்டுதான் இருக்கிறது
கனவில்
ஒவ்வொருவருடமும்
உலகில் எங்கிருப்பினும்!
Comments
Post a Comment