முப்பது நொடிகள்



புழுதிப் பறக்கிற சாலையில்
காற்றில் கலைகிற
சிகைதிருத்தியவாறு வருகிற
உனைப் பார்த்த
அந்த நொடி!

தோழியுடன் சிரித்து
உரையாடிக் கொண்டிருந்த நீ
தலையுயர்த்தி
தன்மையாய்ப் பார்த்த
குளிர் நாளின்
அந்த நொடி!

மழையும் புவியும்
இணைந்து இசைக்கிற
பின்னிரவில்
நின் நினைவு போர்த்தி
காதல் பிரசவித்த
அந்த நொடி!

எதிரில் நீ அமர்ந்திருக்க
என்னமோ உயிர் சூடேறி
உருகும் ஐஸ்கிரீம் தோற்க
உருகி உதிர்ந்த
அந்த நொடி!

எப்போதோ நீண்ட
எதார்த்த உரையாடலில்
அவ்வப்போது
சிறு மௌனம்சூடி
நீ "ம்ம்ம்" சொல்லிய
அர்த்தம்பொதிந்த
அந்த நொடிகளென

முப்பதுநொடிகள்தான் தேறும்
இதுவரை வாழ்ந்த
மொத்த வாழ்வில்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔