நரைத்தமுடி கத்தரிக்கையில்
சிகை கோதியவாறு
கடக்கின்ற சிறுமி
சொல்கிறாள்
இளமைக்கான இலக்கணம்!

சோறு கொஞ்சம்
பசுநெய் கொஞ்சம்
உப்பு கொஞ்சம்
பருப்பு கொஞ்சம்

சுவைக்கு வேண்டும்

அம்மா கை பிசைதல்!!!

என்றோ சந்தித்த
உன் நினைவின் நீட்சி
ஓன்று போதும்

இப்பிறவிப் பெருங்கடலை
பேரன்புடன் நீந்திக்கடக்க!

எங்கோ வீட்டின் மூலையில்
தேய்ந்து ஓய்ந்து
கிடக்கின்ற
உன் பழையப் புகைப்படம்

பார்த்தபின் கடக்கிற
அந்த ஒருநொடி தான்

என் ஒரு யுகவாழ்க்கை!


 !








Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔