அடர்த்தி!



அதிகாலை
வெண்புகையாய்
சூழ்ந்துகிடக்கும் 
இப்பனிக்குத்தான் 
எவ்வளவு அடர்த்தி! 

அதிரடியாய் 
அதனோடு 
போட்டியிட்டு சுடும் 
சூரியனுக்குத்தான்
எவ்வளவு அடர்த்தி! 

குளிரோடும் கொஞ்சியும் 
சூட்டோடு மிஞ்சியும் 
போராடி மகிழும் 
இந்த தேகத்திற்குத்தான் 
எவ்வளவு அடர்த்தி! 

இந்த மிதவேளையில்  
ஆழ்மனதில் 
அழுந்தக் கிடந்து 
ஆட்டுவிக்கும் - உன் 
அன்புதான் 
எத்தனை வியப்புக்குரிய 
அடர்த்தி!  

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔