Posts

Showing posts from September, 2014

வெறுமை

Image
வெறுமை  :- வெறுமையில் கழிகிறது  கணந்தினம்  கண்ணிமைக்கும் முன்பு  வெறுமையின் நீண்ட  வெளியில் குதித்து  வெளியேற விழைந்தேன்  வெறுமையின் வெளிகளில்  மனிதர்கள் இல்லை  மரங்கள் இல்லை  மனிதவாழ்வுக்கான  மகுடங்கள் இல்லை  மனஅமைதி தரும்  வெறுமை மட்டுமே வெளியெங்கும் வியாபித்திருக்கிறது மனிதம் மறந்து  மனம் தொலைந்து  வெறுமையாயிருக்க  வெறுமையின் வெளிதனில்  குதித்து வரலாம்  என்போல் நீங்கள் அங்கே காற்று  கண்களுக்கு புலப்படும்  இதய ஓசை  இரைச்சலாய் கேட்கும் காது பயனற்று  மனம் காதாகும் மாயம் நிகழும் வெறுமையில்  மகிழ்ந்திருக்கும்  வேறு சில  உயிர்களைக் கண்டேன் அங்கு  அட அதில் ஒரு மனிதன் கூட இல்லை.    

இந்த மாலை கடக்குமுன்பு

Image
இந்த மாலை கடக்குமுன்பு :- காற்றுவர ஜன்னலைத் திறந்து  கவிதை கலையாதிருக்க  கதவினை  மூடியாயியிற்று அந்தப்பக்கம் அதீத சத்தம்  எங்கோ ஒலிக்கும்  இருவர் பாடும்  காதல் பாடல் உன் நினைவை  விதைக்கையில்   அவன் அக்குளின்  நாற்றம் மறைக்க  அழகாய் விசிறியடித்த  வாசனைத்திரவியம்  நாசிதுளைத்தது   கலைந்து கிடக்கும் மேகம் காத்துக்கிடப்பது போல் தெரிகிறது மழைவேண்டி  என்னைப்போல்  ஏதேதோ வேண்டிக்கிடக்காமல் அவள் அருந்திய தேநீரில்  அதிக சர்க்கரை என்றாள்  கொண்டக்கடலை  அவியவேயில்லை இவன் எதுவும் தெரியாத  ஏதும் கேக்காத  கிழவி மட்டும்  பொக்கைத்தெரிய  புன்னைகைத்தாள்  நான் கதவடைத்து  இக்கவிதையினை  எழுதிமுடித்திருந்தேன்  இந்த மாலை கடக்குமுன்பு.

ஒட்டுப்பொட்டு

Image
ஒட்டுப்பொட்டு :-  ஒரு பொட்டினை  அந்த நெற்றியிலிருந்து  இந்த நெற்றிக்கு ஒட்ட  எத்தனித்துக் கொண்டிருந்தாள் நெற்றியைக் கொடுத்துவிட்டு நித்தப்பணிகளில்  நீந்திக்கொண்டிருந்தேன் நடுநெற்றியில் ஒட்டவைக்க  நன்றாகப் பிரயத்தனம் செய்தும்  நழுவிக்கொண்டிருந்தது  ஒட்டுப்பொட்டு  இரேண்டொருமுறை  கீழேவிழுந்தும்  ஏழெட்டு முறை  இடுக்குகளில் சிக்கியும்  கிடைத்திருந்தது  அவளுக்கு அது கோந்து காயினும் கொண்டகாரியம் காயாது  எச்சில் தொட்டு  ஒட்டியிருந்தாள்  முடிவில் அதை  பொட்டு ஓட்டியதும்  பொண்ணாகியிருந்தேன்  நான்  எனக்குதெரியாது  அவளுக்குமட்டும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

Image
யாதும் ஊரே, யாவரும் கேளிர் :-               திருமணமாகி சில மாதங்களான உடனே என்ன விஷேசம் ஏதும் உண்டா??!! என கேட்கும் பாரம்பரியம் கொண்ட சமுக அமைப்பு நமது. அனேகமாக எல்லா தம்பதிகளும் இந்த கேள்வியை எதிர்நோக்கி இருப்பார்கள். இந்த கேள்வியின் பின்ணணி குறித்து கொஞ்சம் சிந்திக்கிறேன். இந்த மாதிரியான கேள்விகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒருவித நெருக்கடியினை உளவியல் ரீதியாக தருவதனை கவனித்தும், கேட்டும் இருக்கிறேன். திருமணத்தை ஒரு கடமையாகவும், கட்டாயம் நிகழ வேண்டிய நிகழ்வாகவும் கருதும் நமது சமுகத்தில் இந்த மாதிரியான கேள்விகளும் சகஜம்தான் என்றாலும் அடிப்படையில் ஒரு மகிழ்வை தெரிந்து கொள்ளும் நோக்கில்தான் இந்த மாதிரியான வழக்கம் நம்மிடையே உருவாகியிருக்க வேண்டும். இன்றும் அக்கறையோடு, ஆசையோடு கேட்கப்பட்டாலும் அதன் பின் ஒரு ஒப்பீடு மனப்பாங்கு பெரும்பாலானவர்களுக்கு இருப்பதை காணமுடிகிறது. உயிரியல் விதிகளின் படி ஒரு உயிரின் நோக்கமே பிறப்பித்தல் என்றாலும் அதனை வைத்து ஒரு உளவியல் குளறுபடிகள் செய்வதை ஏற்க முடிவதில்லை.             ...

பூதம்

Image
பூதம் :-  கதவை அடைத்து  கணிகையில் மூழ்குகையில்  விழித்துக்கொள்கிறது  அந்தப் பூதம் திடீரென  கொஞ்சம் மெல்லமாய்  தலையிலமர்ந்து  கொசு கடிப்பதுபோல்  மூளையினை  கொத்தத் தொடங்கியது  அந்தி சாயும் வேளையில் அது கொத்தலைப் பொருட்படுத்தாது  கொறித்து கொண்டிருந்தேன்  கொஞ்சம் கொஞ்சமாக  மூளை குறைவதை  முழுவதும் அறியாது மூளைதாண்டி அது  முன்வருகையில்  உதாசீனம் செய்து நான்  உயரேச் செல்கையில்  வழிந்த மூளையை  நக்கத் தொடங்கியிருந்தது அது  பூதம் மறந்து  புதியவற்றில் நீந்துகையில் காலைக் கவ்விக்கொண்டு  கவனம் கலைத்தது  மறுபடியும் அது  என்னடா  இரெண்டொரு நாட்களாய்  தொட்டனைக்கும்  தொலைவில் வராது  தொலைந்திருந்த பூதம்  தொல்லைதருகிறதே இன்று  என்று பிடித்து  எழுதிவிட்டேன்  அந்த கவிதை பூதத்தை மேற்ப்படிக்  கவிதையாக. 

பா ரதி யார்??

Image
பா ரதி யார்?? :- உடல் மரித்தும்  உயிர் வாழும்  உன்னத கவி இவன் களிறு எத்தி  காலம் கொண்டுசென்றாலும் இவன்  கவிதைகள் எத்திதான்  காலம் கொண்டு செல்கிறது  தண்ணை தமிழ் மண்ணை  பார்ப்பா னா கப் பிறந்து  பார் பாப்பானாகி  பாரெங்கும் சிதறிக்கிடக்கிறது  இவனது வரிகள்  வேறொரு வாயிலாக பா முதலெழுத்தாகாகவும் பாவே உயிரெழுத்தாகவும்  வாழ்ந்தவன் இவன்  வரிகளில் வாழ்பவன் - நன்  நெறிகளின் காதலன் வாழ்வின் சொல்லெனா மூலைக்கும்  வெள்ளக்கட்டியென  தமிழ் தீட்டி  வரி நீட்டி  முழக்கியவன் பா ரதத்தை  யார் எவருக்கும்  அஞ்சாது துஞ்சாது  செலுத்தியதாலும்  பாரதியாரனவன்.

எழுத்தறிவித்தவன்

Image
எழுத்தறிவித்தவன் :- கண்ணங்கரிய  நிறத்தோடு எண்ணெய் வழியும் தலையோடு மந்தை பள்ளிக்கு விந்தைமனதோடு சென்றவன் நான் குடித்து குடித்து குடிகார வாத்தியார் என பட்டம் பெற்ற அருணாசலம் வாத்தியார் என்னை அடித்த நான் படித்த முதல் வாத்தியார் இரெண்டாம் வகுப்பில் சாந்தி டீச்சரும் மூன்றில் சரஸ்வதி அம்மையாரும் நான்கில் மீண்டும் அருணாசலமும் ஐந்தில் சரஸ்வதியும் என்னை அடித்து வைத்தார்கள் அவ்வப்போது படிக்க வைத்தார்கள் ஆறாவதில் வந்தார் அந்தோணி நேசன் வரலாற்றின் பேசன் வளர்த்தார் பொதுஅறிவு நீறூற்றிக் கொஞ்சம் நினைவூற்றி நிறைய ஏழாவதில் அற்புதம் அம்மையார் அற்புதம் ஏதும் நிகழ்த்தாமலே அடுத்து எட்டாவதில் மதுரநாயகம் வெளிஉலகம் நூலுலகம் வழிக் காண்பித்தார் கிராமம் விட்டு நகரம் வந்தேன் ஒன்பதுக்கு இசக்கிமுத்து, இங்கேயும் ஆங்கிலம் போதித்த ஒரு அபிநய சரஸ்வதி அறிவியல் போதித்த திலகர் வந்து போயினர் பத்தாவதில் அகத்தீசுவரன் காந்திமதிநாதன் இசக்கிமுத்து திலகர் என எல்லோரும் போதித்தாலும் என்னை எனக்கு உணர்த்தியது மணிசுந்தரி அம்மையாரே பதினொன்றில் ராமானுஜம் தமிழ் செல்லம் ஆங்கிலம...

நினைவொன்று

Image
நினைவொன்று :-  வெறிபிடித்த ஓநாய்போல  நெகிழ்ந்தெடுத்துக்கொண்டிருத்தது  ஆழத்தில் புதைத்திருந்த  ஆதர்ச ரகசியங்களை  எதுவென்று புரியாத நினைவொன்று  நட்சத்திரங்கள்   இறைந்து கிடக்கும் தெருக்களில்  மணல்துகள்கள் மழையாக  மேலிருந்து பொழிய தலைகீழாக நடக்கத் தொடங்கியிருந்தது  வெளிவந்த நினைவொன்று   ஓநாய்க்கு கடிவாளமிடவும்  நினைவுகளை கல்லறையிடவும் வழியற்ற வறியதாய்  - பசியில்  தன்னைத்தானே தின்றுகொண்டு  தரணி வெறுத்தலைகிறது  முதிர்ந்த நினைவொன்று  அற்ப வாழ்வியலில்  அநேக அகம் முழுக சொற்ப வாழ்வியலை  சொர்க்கமென ஆக்க  கற்பமொன்று வளர்க்கிறது  கரைகின்ற நினைவொன்று என்னவெல்லாம் எண்ணினும்  முடிகையில்தான் துவங்கும்  மூப்படையும் இப்பிறப்பு  என்று சொல்லி  சாந்தமடைகிறது  இயல்பான நினைவொன்று.   

கொடுமை

Image
கொடுமை :- ஒவ்வொரு இரவின்  மங்கிய வெளிச்சத்தில்  சுவாசம் கவனிக்கிறோம்  எப்போது நிற்க்குமென  நித்தம் உறக்கத்தில்  நீளும் குறட்டையொலியில்  கடந்த வாழ்வு  கடந்துபோகிறது கடுமுயிரை அறுக்காது ஒவ்வொருமுறை  உணவருந்துகையிலும்  "இப்பிடித் தின்னா  என்னைக்கு போக" என  எங்களுக்குள் இருக்கும்  ஏளனச் சாத்தான்  எப்போதும் மௌனமாய்  கேள்விகள் எழுப்புகிறது ஒதுக்கிய தட்டும்  ஒன்றிய குவளையுமாய்  வரலாற்றை ஒதுக்கி  வாழ்வதாய் பிதற்றிக்கொள்ளும்  வக்கிரக்கார வம்சாவழிகள்  நாங்கள் பெருவிரலொடித்து  பெயர்ரேகைப் பிரட்டி  வம்படியாய்  வாங்கிகொல்வோம்  எனச்சொல்லி   அற்ப சொத்துக்காய்  அலைகின்ற அற்பங்கள் நாங்கள் தாய்ப்பால் புகட்டி  தாலாட்டிய நேரத்தில்  கள்ளிப்பால் புகட்டி  கதைமுடித்திருக்கலாம்  முதியோர் இல்லத்தில் விடப்போகிற   இந்த நாளை நீ  முன்னமே  உணர்ந்திருந்தால...