நினைவொன்று
நினைவொன்று :-
வெறிபிடித்த ஓநாய்போல
நெகிழ்ந்தெடுத்துக்கொண்டிருத்தது
ஆழத்தில் புதைத்திருந்த
ஆதர்ச ரகசியங்களை
எதுவென்று புரியாத நினைவொன்று
நட்சத்திரங்கள்
இறைந்து கிடக்கும்தெருக்களில்
மணல்துகள்கள் மழையாக
மேலிருந்து பொழிய
தலைகீழாக நடக்கத் தொடங்கியிருந்தது
வெளிவந்த நினைவொன்று
ஓநாய்க்கு கடிவாளமிடவும்
நினைவுகளை கல்லறையிடவும்
வழியற்ற வறியதாய் - பசியில்
தன்னைத்தானே தின்றுகொண்டு
தரணி வெறுத்தலைகிறது
முதிர்ந்த நினைவொன்று
அற்ப வாழ்வியலில்
அநேக அகம் முழுக
சொற்ப வாழ்வியலை
சொர்க்கமென ஆக்க
கற்பமொன்று வளர்க்கிறது
கரைகின்ற நினைவொன்று
என்னவெல்லாம் எண்ணினும்
முடிகையில்தான் துவங்கும்
மூப்படையும் இப்பிறப்பு
என்று சொல்லி
சாந்தமடைகிறது
இயல்பான நினைவொன்று.
Comments
Post a Comment