இந்த மாலை கடக்குமுன்பு
இந்த மாலை கடக்குமுன்பு :-
கவிதை கலையாதிருக்க
கதவினை மூடியாயியிற்று
அந்தப்பக்கம் அதீத சத்தம்
எங்கோ ஒலிக்கும்
இருவர் பாடும்
காதல் பாடல்
உன் நினைவை
விதைக்கையில்
அவன் அக்குளின்
நாற்றம் மறைக்க
அழகாய் விசிறியடித்த
வாசனைத்திரவியம்
நாசிதுளைத்தது
கலைந்து கிடக்கும் மேகம்
காத்துக்கிடப்பது போல்
தெரிகிறது மழைவேண்டி
என்னைப்போல்
ஏதேதோ வேண்டிக்கிடக்காமல்
அவள் அருந்திய தேநீரில்
அதிக சர்க்கரை என்றாள்
கொண்டக்கடலை
அவியவேயில்லை இவன்
எதுவும் தெரியாத
ஏதும் கேக்காத
கிழவி மட்டும்
பொக்கைத்தெரிய
புன்னைகைத்தாள்
நான் கதவடைத்து
இக்கவிதையினை
எழுதிமுடித்திருந்தேன்
இந்த மாலை கடக்குமுன்பு.
Comments
Post a Comment