பா ரதி யார்??

பா ரதி யார்?? :-

உடல் மரித்தும் 
உயிர் வாழும் 
உன்னத கவி இவன்

களிறு எத்தி 
காலம் கொண்டுசென்றாலும் இவன் 
கவிதைகள் எத்திதான் 
காலம் கொண்டு செல்கிறது 
தண்ணை தமிழ் மண்ணை 

பார்ப்பானாகப் பிறந்து 
பார் பாப்பானாகி 
பாரெங்கும் சிதறிக்கிடக்கிறது 
இவனது வரிகள் 
வேறொரு வாயிலாக

பா முதலெழுத்தாகாகவும்
பாவே உயிரெழுத்தாகவும் 
வாழ்ந்தவன் இவன் 
வரிகளில் வாழ்பவன் - நன் 
நெறிகளின் காதலன்

வாழ்வின் சொல்லெனா மூலைக்கும் 
வெள்ளக்கட்டியென 
தமிழ் தீட்டி 
வரி நீட்டி 
முழக்கியவன்

பா ரதத்தை 
யார் எவருக்கும் 
அஞ்சாது துஞ்சாது 
செலுத்தியதாலும் 
பாரதியாரனவன்.

Comments

  1. மிக நன்று.
    எனக்குப் பிடித்துள்ளது.
    மிக ரசித்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔