வெறுமை

வெறுமை :-

வெறுமையில் கழிகிறது 
கணந்தினம் 
கண்ணிமைக்கும் முன்பு 

வெறுமையின் நீண்ட 
வெளியில் குதித்து 
வெளியேற விழைந்தேன் 

வெறுமையின் வெளிகளில் 
மனிதர்கள் இல்லை 
மரங்கள் இல்லை 
மனிதவாழ்வுக்கான 
மகுடங்கள் இல்லை 
மனஅமைதி தரும் 
வெறுமை மட்டுமே
வெளியெங்கும் வியாபித்திருக்கிறது

மனிதம் மறந்து 
மனம் தொலைந்து 
வெறுமையாயிருக்க 
வெறுமையின் வெளிதனில் 
குதித்து வரலாம் 
என்போல் நீங்கள்

அங்கே காற்று 
கண்களுக்கு புலப்படும் 
இதய ஓசை 
இரைச்சலாய் கேட்கும்
காது பயனற்று 
மனம் காதாகும்
மாயம் நிகழும்

வெறுமையில் 
மகிழ்ந்திருக்கும் 
வேறு சில 
உயிர்களைக் கண்டேன் அங்கு 
அட அதில் ஒரு மனிதன் கூட இல்லை. 

  

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔