பூதம்
பூதம் :-
கதவை அடைத்து
கணிகையில் மூழ்குகையில்
விழித்துக்கொள்கிறது
அந்தப் பூதம் திடீரென
கொஞ்சம் மெல்லமாய்
தலையிலமர்ந்து
கொசு கடிப்பதுபோல் மூளையினை
கொத்தத் தொடங்கியது
அந்தி சாயும் வேளையில் அது
கொத்தலைப் பொருட்படுத்தாது
கொறித்து கொண்டிருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாக
மூளை குறைவதை
முழுவதும் அறியாது
மூளைதாண்டி அது
முன்வருகையில்
உதாசீனம் செய்து நான்
உயரேச் செல்கையில்
வழிந்த மூளையை
நக்கத் தொடங்கியிருந்தது அது
பூதம் மறந்து
புதியவற்றில் நீந்துகையில்
காலைக் கவ்விக்கொண்டு
கவனம் கலைத்தது
மறுபடியும் அது
என்னடா
இரெண்டொரு நாட்களாய்
தொட்டனைக்கும்
தொலைவில் வராது
தொலைந்திருந்த பூதம்
தொல்லைதருகிறதே இன்று
என்று பிடித்து
எழுதிவிட்டேன்
அந்த கவிதை பூதத்தை
மேற்ப்படிக் கவிதையாக.
கதவை அடைத்து
கணிகையில் மூழ்குகையில்
விழித்துக்கொள்கிறது
அந்தப் பூதம் திடீரென
கொஞ்சம் மெல்லமாய்
தலையிலமர்ந்து
கொசு கடிப்பதுபோல் மூளையினை
கொத்தத் தொடங்கியது
அந்தி சாயும் வேளையில் அது
கொத்தலைப் பொருட்படுத்தாது
கொறித்து கொண்டிருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாக
மூளை குறைவதை
முழுவதும் அறியாது
மூளைதாண்டி அது
முன்வருகையில்
உதாசீனம் செய்து நான்
உயரேச் செல்கையில்
வழிந்த மூளையை
நக்கத் தொடங்கியிருந்தது அது
பூதம் மறந்து
புதியவற்றில் நீந்துகையில்
காலைக் கவ்விக்கொண்டு
கவனம் கலைத்தது
மறுபடியும் அது
என்னடா
இரெண்டொரு நாட்களாய்
தொட்டனைக்கும்
தொலைவில் வராது
தொலைந்திருந்த பூதம்
தொல்லைதருகிறதே இன்று
என்று பிடித்து
எழுதிவிட்டேன்
அந்த கவிதை பூதத்தை
மேற்ப்படிக் கவிதையாக.
Comments
Post a Comment