Posts

Showing posts from April, 2015

தூக்கில் தொங்கும் காலம்

Image
திரு நெல்வேலி மாவட்டத்தில் தீரா! தாமிரபரணி நதிக்கரையில் கொஞ்சம் விளைநிலமிருக்கிற மிஞ்சிய குடும்பவழியன் நான் அடிக்கடி நிகழும் அசூர வியாபார உரையாடலில் "அம்மா சொல்வாள் எங்க ஆயுசுக்கும் இருக்கட்டும் அப்புறம் நீங்க என்னோவோ பண்ணிக்குங்க" நேற்றைய தலைமுறைவரை நெஞ்சுபிளந்து விதைத்தபோதெல்லாம் குஞ்சுமணியாவது கொட்டிகுடுத்த எங்கள் நிலமது மனிதம் செத்த பொழுதில் மணலள்ளி நதியின் துகிழுறித்தனர் அதன்பால் மழைப் பொய்த்து அடிமடி அறுத்தனர் எதிர்காலம் கருதி ஏதேதோ படித்து எங்கேயோ நகர்ந்து எப்படி எப்படியோ வாழுகின்ற விதைத்த தலைமுறையின் விஞ்சிய நிழல்கள் நாங்கள்  வயலழித்து இடம் செய்து வனமழித்து சட்டம் செய்து விதையழித்து வீடாக்கி வெள்ளைக்காரனுக்கு கூட்டிக்கொடுத்து வென்றுவிட்டதாக எண்ணும் நாமனைவரும் நேற்றுத் தொங்கிய ஒருவன் போல நித்தம் தூக்கில் தொங்கும் காலம் மட்டும் தொலைவிலில்லை. 

நேற்றெடுத்த புகைப்படம்

Image
நேற்றெடுத்த புகைப்படம் என்றொன்றை அனுப்பினாள் விழிகள் வலிக்க வியந்து பார்த்து அத்தனை அழகென்றேன் அப்படியா என்றாள் ஆமாம் மீண்டும் தனியனாகி உன்னைப் பின்தொடர யோசிக்கவைக்கும் அழகென்றேன் ஒரு பெரிய வணக்கம் வைத்து விடைபெற்றாள்!!! 

தோசை

Image
அதீத ருசிக்காக அந்த குறிப்பிட்ட மாவினை வாங்கி வந்தாயிற்று அனல் பறக்கும் அண்மைக் கல்லில் ஆவிபறக்க வார்த்து எண்ணெய் விட்டு, நெய் விட்டு எடுத்தாயிற்று சன்னமாய் இடித்த பொடியும் அரைத்த துவையலும் சேர்த்து குழப்பி சேர் வாய் சேர்க்கையில் மூளை சொன்னது முட்டாளே நான் கேட்டது அம்மா வார்த்த தோசை.!!

ஓ காதல் கண்மணி - பார்க்கவேண்டிய நவகால கண்மணி!!

Image
குறைந்த வெளிச்சமுள்ள  ரயில் நிலையத்தில் ரயிலின்  முன் குதிக்க ஆயத்தமாகும் தாராவை (நித்யாமேனன்) எதேச்சையாகப் பார்த்து கோபத்தில் திட்டுகின்றவாறு அறிமுகம் ஆகிறார் ஆதி (துல்கர் சல்மான்). ரயில் நிலையம், கொஞ்சம் இருட்டான சூழ்நிலை, படோபடம் இல்லாத நாயகன் நாயகி அறிமுகம். மணிரத்னம் படம் ஆரம்பம். மொத்தம் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், இசையோடு ஐந்து.! நாயகன், நாயகி, கணபதி அங்கிள்(பிரகாஷ் ராஜ்), அவரது மனைவி. கொஞ்சநாட்கள் சேர்ந்து  வாழ விரும்பி சேர்ந்து கொண்டு, ஒரு மூத்த தம்பதிகளோடு இணைந்து அவர்களது வீட்டில் வாழ்கின்ற இளம் தம்பதிகளின் (தாலி கட்டினால் தான் தம்பதியா!) வாழ்வின் சிறு பகுதியே கதை. தனது வழக்கமான சிறு வசனங்கள், ஒளிப்பதிவு யுக்தி, திரைக்கதை ஆக்கம் இவற்றால் தொய்வின்றி படத்தினை நகர்த்தியிருக்கிறார் மணிரத்னம். படம் முழுவதையும் நான் விவாதிக்க விரும்பவில்லை. நீங்கள் படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இளைய தலைமுறைகளிடையே இந்தப் படம் மிகுந்த வரவேற்பினை பெற்றிருப்பதாகவும், நமது கலாச்சார கோஷ்டிகளிடம் அதிருப...

சைக்கிள் - என் இயந்திரத் தோழன்

Image
         இன்று உலக சைக்கிள் தினம் என்று முகப்புத்தகத்தில் விழித்தபோது சொல்லிற்று. சைக்கிள் குறித்து ஒரு கவிதை எழுதவேண்டுமென வைத்திருக்கும் புகைப்படங்களிலுள்ள சில சைக்கிள் படங்கள் நியாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும். கவிதை என்ற சுருக்கத்தில் அடைத்துவிடமுடியாப்  பெரும் வரலாறென்பதால் அதை இப்படி கட்டுரை வடிவில் எழுதலாம் என முடிவு செய்தேன்.       சைக்கிள் என் வாழ்வில் பயணித்த எல்லா மனிதர்களைப் போலேயும் எனக்குள், என்னுடன் பயணித்திருக்கிறது, நானும் சைக்கிளை ஓட்டிய காலங்களோடும், சைக்கிளின் நினைவுகளை ஓட்டி வாழும் காலங்களோடும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.      எனக்கும் சைக்கிளுக்குமான உறவு எனது சிறு பிள்ளை பிராயத்திலிருந்தே தொடக்கம். கிராமத்து பிள்ளைகளுக்கு சிறுவயதில் சொந்தமாக ஓர் சைக்கிளும், சுயமாக யாருடைய தயவின்றியும் அதை ஓட்டுவதும் ஒரு பெருங்கனவு. அந்தக் கனவுகள் துரத்திய காலங்கள் எனக்குமுண்டு.      எனது சுத்தமல்லி கிராமத்தில் எனக்கு தெரிந்து மூன்று சைக்கிள் கடைகள் உண்டு. ஓ...

Auto Immune Diseases and Its Social Implications

Image
It is been there in my mind for sometime to write on this topic. Diseases and It's social implications. Few months back I had written about the awareness needed among people about diseases, It's management patterns (From a patient point of view), and the today emerging money making healthcare era. This awareness and knowledge will help us to reach better solutions without confusions. Last week I had chance to meet a doctor, and a patient's husband. Where the patient is suffering from a kind of problem called Auto Immune disorder. By reading the name you can come in to the understanding that it's something with immunity. As I am not medical doctor who can speak much on this disease, but as the doctor friend of mine given some insight of this disorder and it's social implications. Which I consider to be important to know everyone and get aware. As the doctor said the auto immune disorder is something where your body muscles get treated like a enemy by your...

Ramesh Kumar - One among the Few Good Men I Met!!

Image
                                When we born we are human, But while dying are we really die as human..??      I remember, It was 2008, one fine Monday morning I first met Ramesh at Dr.Dr. Satish clinic, Purasaiwalkkam, Chennai, during my first day of induction with Manoj on. Ramesh spoke to me with the greetings like person whom I have been known already for years!. And he given some tips about work and he sponsored me a mosambi juice!!.      Then after few days, I came to know that he has promoted as a Sales Training manager and needs to relocate to Bangalore. In the meantime he shared his knowledge about Chennai, work culture and the areas I can choose to stay etc. Without much asking he came forward and guided me. That's Ramesh. With few meetings with him I felt close and happy that I met someone after long time on my professional environment who is a nice human...

அந்நியன்

Image
நுழைந்தததும் இயக்குகின்ற தொலைக்காட்சி அவனுக்கு மனைவி போல பேச்சு துணைக்கு செய்திகள் வசிப்பவனோடும் செய்திகள் குறித்தும் தொலைக்காட்சியோடு பேசுதல்தான் அவனுக்கு மனைவியின் தொலைவை மறக்கச்செய்யும் போல மடிக்கணினி மூத்த பிள்ளை கைப்பேசி இளைய பிள்ளை அவன் மாறிமாறி அவற்றோடு நேரம் செலவழிப்பதால் அப்படித்தான் படுகிறதெனக்கு மூன்றையும் அணைக்காது இயக்கி அருகிலிருக்கையில் அண்டவிடாத பொழுதில் அவன் குடும்பத்தோடிருப்பதாய் சமயங்களில் குழம்பிக்கொள்வேன் அவன்கள் அவர்களாகையில் அபத்தம் குறையினும் அத்துணை முக்கியமா அந்த காகித வெள்ளையப்பன்!! 

அகல்

Image
நீயேற்றுவது போல் அத்தனை அழகாய் ஒளிர்வதில்லை எப்படி முயன்றும் எங்கேனும் நமத்து போகும் நானேற்றும் அகலின் ஒளி திரிசமைத்து திசையெங்கும் தினசரி என்னை ஒழுக ஏற்றும் எந்த தீபமும் எரிவதில்லை இயல்பாய் அரையிருளில் ஒளிரும் அறையிருளில் எங்கேயோ நீ ஒளிந்து கொண்டிருப்பதாய் இயல்பாய் தேடி விரைகிறது கிடைக்காது  தேம்பி அழுகிறது பக்குவம் மறந்த பால்ய மனது ஏற்றும் கைகள் எங்கேயென யாசித்து அணைகிறது போலும் அகலும் அடிக்கடி என்போல் அமானுஷ்ய கனவுகள் நிகழும் அதிரடி நினைவுகள் தவழும் உயரத்திலேறி பள்ளத்தில் விழுந்து கரையும் உள்ளக்கிடக்கை ததும்பி வழிகிறது ஒளி குறைந்து அகல் அணைகையில் எண்ணெய் தவிர்த்து என்னைத் திரியாக்கி கண்ணீர் கொண்டு கரைந்து தீபம் ஏற்றும்போது புலப்படட்டும் உன் உண்மை உருவம் அதுவரை அறையிருளில் நானும் அகலும் கதைத்துக் கொண்டிருப்போம் பிரிவாற்றாமையில் பேரின்பம் உள்ளதாயென.

அவள் பாதங்கள்

Image
அவள் கால்விரல்கள் குறித்த கனவொன்று கால்பதித்திருந்தது கரிய இரவின் கலைந்த நினைவில் சற்றே நீண்ட பாதங்கள் இரெண்டும் அவளது அழகு நிலையங்களில் அடிக்கடி அழகுபடுத்திக் கொள்வாலென நினைக்கிறேன் அவசியமின்றி பெருவிரல்கள் இரெண்டும் நீண்டு தலைவன் போலும் ஏனைய விரல்கள் எட்டும் ஏவகம் பணியும் சேவகர்கள் போலும் அத்தனை ஒருங்கமைப்பாய் அழகுமிளிர அமைந்திருக்கும் பாதங்கள் அவளது சதைமீறி நீண்ட சிறு நேர்த்தி நகங்களில் அவள் புனையும் அழகு நிறங்கள் அத்தனையும் அழகு அவள் முகம்தவிர்த்து பலமுறை பாதங்களில் நெடுநேரம், குறுந்தூரம் பயணித்திருக்கிறேன் கண்கள் வாகனமாய் கவ்விக்கொண்டு குதிங்கால் உயர பாதுகைகள் அணிந்து அவள் நடக்கையில் பயந்திருக்கிறேன் பரிதவித்திருக்கிறேன் பாதங்கள் நோகுமேயென்று சிலகவிதைகள் அவள் பாதங்களில் பிறந்து என் வரிகளில் வளர்ந்திருக்கின்றன எத்தனையிருந்தும் அவள் பாதங்கள் தடவி விரல்கள் சொடுக்கி நனவில் விழையாது கரைந்து போன கனவு காதல் பாதங்களவை.

எல்லா இருவருக்கும்

Image
சிலமுறை அவனையும் பலமுறை  அவளையும் அங்கீகாரமாய் முழு இசைவின்றிப் புணர்வதர்கிடையில் எப்போதாதவது வாய்க்கிறது இசைந்த மனிதக்கூடல் இருவருக்கும் நினைவுகளில் நிர்வாணப்படுத்தி கனவுகளில் கற்பழிக்கும் மிருகம் விழித்துக் கடக்கையில் துளிர்க்கிறது மனிதருக்கான ஞானம் - இரு மனங்களுக்கிடையே அவள் நினைவை அவன் புணர்வதும் அவன் நினைவை அவள் புணர்வதும் தொலைவுகள் உணர்த்தும் தொல்லை நிகழ்வு கடக்கும் உருவில் கண்தேடியோ, கால்கள் தேடியோ காதல் தேடியோ கனத்த எல்லாந் தேடியோ கனக்கிறது மனம் அவர்களுக்கு வயிற்றுப் பசிக்கும் வயதின் பசிக்கும் போராடி முடிக்கையில் புலப்படுகிறது வாழ்தல் இலக்கணம் தாமதமாய் உணர்ந்ததை நினைத்து உருப்படியாய் வாழ இன்னொரு பிறவி இழி மனிதனாய் வேண்டும் எல்லா இருவருக்கும் எங்கள் புவியுலகில்.