தீராத குவியலாய்
நேற்றும் புதிதாய்
வந்து சேர்ந்தன
சோடி புது காலணிகள்
பழைய அதே
சோடி கால்களுக்கு
சட்டைகளும், பனியன்களும்
உள்ளாடைகளும்
கை,காலுறைகளும் என
முதிர்வுரும்
உடலை வனப்படுத்த
குவித்துக் கொண்டே இருக்கிறேன்
இளமை மெருகேறி
எதிர்பதமாய்
கொழிக்கின்ற மனது மட்டும்
குவித்துக்கொண்டே இருக்கிறது
செத்தாலும் தீராத
குவியலாய்
உன் நினைவை!.
Comments
Post a Comment