ஐன்ஸ்டீனெல்லாம் அப்புறந்தான்!
குழப்பம் தெளிகையில்
முடிவெடுத்து
பரபரப்பாய் கிளம்பி
சேர்ப்பிடம் சேர்ந்து
காய்களும் கனிகளும்
ரொட்டியும் கட்டியுமாய்
இரெண்டொரு வார சமையலுக்கு
எல்லாம் வாங்கி
வீட்டு சாப்பாட்டின்
விந்தைகள் பேசி
வயிறுகளை காக்க
வம்படியாய் சபதம் ஏற்று
கூடை பிதுங்கி
பேருந்துக்கு காத்திருக்கையில்
சிந்தை கலைக்கும்
பிரியாணியின் வாசம் நுகர்ந்ததும்
"நாளைக்கு ஹோட்டல் போய் சாப்பிடலாமா"
எனக் கேட்டுச் சிரிக்கிற
மனைவியைப் புரிந்தவனே
மகா விஞ்ஞானி
ஐன்ஸ்டீனெல்லாம் அப்புறந்தான்!
Comments
Post a Comment