நிறம்



திரண்ட
வெள்ளைச் சதைக்குவியலை மட்டும்
அழகென்று பிதற்றும்
கருத்த தேகத்தோனை
இன்று வழியில் சந்தித்தேன்!

முகத்தை
வெள்ளையாகக் காண்பிக்க
தடித்த முகப்பூச்சு அணிந்திருந்தானவன்
அது மூளைவரை
சென்றமை புலப்பட்டது
அகலவாய்
அவன் திறந்தபோது!

வதனம் வெள்ளையாகவும்
வனப்புடல் வேறொரு நிறமாயும்
அலைகின்ற இவனுக்கு
அழகென்னத் தெரிந்திருக்கும்?
மனம் பேச, அடக்கிவைத்தேன்!

உடல்முழுதும் பூச்சு மொழுகிய
ஒரவள்கள் கடக்கையிலே
பூச்சு தாண்டி
பொலிவானது
அவனுக்கு முகம்!

மாநிறம் மட்டமென்றான் - அது
மனித நிறமே இல்லையுமென்றான்
பூச்சு மூளைக்கு இறங்கிய
புது வெள்ளையன்!

எரிச்சல் தலைக்கேறி
ஏதும் போதிக்காமல்
இறங்கி நடக்கையில்
வெள்ளைச் சதைக்குவியலை மட்டும்
அழகென்று பிதற்றும்
வெளிறிய சந்ததிகள்
வெளியேறி நடக்கக் கண்டேன்!.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔