ஒரு கவிதை செய்யலாமே!!
அங்காடியில்
அலைந்தமர்ந்து
அமர்கின்ற கண்களில்
நீல வண்ண உடையில்
மேகமாய் ஒருத்தி
நீண்ட பச்சை மேலங்கியில்
நெஞ்சை இழுக்குமொருத்தி
காதல் பொங்கும்
கருமை நிறத்தில்
கண்சாயம் பூசியொருத்தி
சிவந்த வானம்
மறந்து போகச் செய்கின்ற
சிவப்பு சிரிப்பிலொருத்தி
எங்கோ தள்ளி
ஏதும் தெரியாது
வெண்மை சிரிப்பை மட்டும்
சன்னமாய் உதிர்க்கும் ஒருத்தி
வண்ணங்களாய் வருகின்ற
எல்லா ஒருத்தியிலும்
வாழ்வில் வராத
நீயே விரிகிறாயடி
என் செய்ய
என்கிற அவனிடத்தில்
"எனக்கு கல்யாணம் ஆயிட்டேடா"
என்கிறவளிடம்
அதனாலென்ன
ஒரு கவிதை செய்யலாமே என்றான்.
Comments
Post a Comment