நீயின்மையின் சாட்சியாய்
தூசிபடிந்த அறையினுள்
நான் வழக்கமாய்
நடக்கும் பாதை
வெயில் படுகையில்
புலனாகிறது
அருந்திவிடுவதாய்
வாங்கிவைத்து
அழுகிக்கொண்டிருக்கின்றன
வண்ணவண்ண
வனப்புத் திரவக்குடுவைகள்
குளிரூட்டியில்
பகலில் கொறித்துவிட்டு
மறந்துபோன இனிப்பினை
சூழ்ந்து கொண்டாடிக்
கொண்டிருந்தன
இரவில் எறும்புகள்
அழுங்கல் குழுங்களில்லாது
வைத்தது வைத்தபடி
அசிங்கமாய்க் கிடக்கிறது
அலமாரியின் அங்கங்கள்
நீயின்மையின் சாட்சியாய்
நீளும் வீட்டில்
உனக்காக வாங்கின
சிறு உணவருந்தும் தட்டினை
திரும்பத்திரும்ப
துடைத்து விட்டு
நாட்கள் தேய்கிறதா
என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Comments
Post a Comment