கனவினி




கனத்த கன்னங் கொண்டு - சற்றே 
கருத்த தேகங்கொண்ட
வெள்ளைமன தேவதை 
விடியும் பொழுதுகளில் 
முடியும் கனவுகளிலூடே 
நெடியாய் வருவதுண்டு  

எங்கோ எனைக் கடந்த - இல்லை 
நான் கடந்த 
பிரதிகளின் பிம்பத்தொகுப்பு போல
எனப் எப்பொழுதும் போல்  
பெரிது படுத்தியதில்லை - எனினும் 
தொடர்ந்து படுத்தி
தொல்லைகள் பெரிதானது 

ஊழ்வினை வழியேயான 
உலகமதில் 
உருண்டு செல்லுகையில் 
படுத்தி பெரிதான
பாவைப் பிம்பமதின் 
பளிச்சென்ற பிரதியைக் 
கண்டேன், கொண்டேன் 
கனவின் காதலை 
நனவில்

வர்ணனை தேக்கமுற்ற 
வார்த்தைகள் தோற்றுப்போன 
கனவினியால் விழைந்த 
கையறு நிலையது 
கைக்கிளை கிளையது 

கருவிழி புகுந்து 
கனத்த இதயமது நுழைந்து 
கண்டுகொண்டேன் 
கண்டுகொண்டாள் 
கனாவினை, அதெழுப்பிய 
வினாவினை, விடையினை 

அதிக நேர்முகமில்லை 
அடிக்கடி அறிமுகமில்லை 
முகவரியற்ற கனவுகள் 
முடிவற்றதாய் தொடர 
அவன் அங்கேயும் 
இவள் இங்கேயும் 
அவர்கள் அருகருகேயும் 
வாழ்வதாய் தொடருகிறது 

இலக்கணம் வகுக்கும் - அவள் 
இன்னும் சொல்லாத 
இனிய கனவு.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔