தனிமையில் பாடுகின்ற அவன்




கூரையிலிருந்து உமிழுகின்ற
கொஞ்ச விளக்குகளின் 
கூடிய ஒளியினை விட 
கொஞ்சம் குறைவான 
ஒலியளவில் 
ஒன்றி, உருகிப் பாடுதல் 
அருகில் அவளற்ற 
தனிமையைக் கழிக்க

அவன் கையாளும் உத்தி 
உத்தியோகப் பொழுதுகளில் 

இளம்வயதில் -குடும்ப 
பாரம்சுமக்க 
பயணப்பட்டு வந்த 
பாதிப்பு வழியும் 
முகக்கலை அவனது

எப்பொழுதோ இருக்கும் 
என்முகம் போல்

அவன் 
தினமும்  
வருகையிலும் 
போகையிலும் 
நீங்கள் பார்த்தீர்களானால் 
இழப்பின் சோகம் 
இழையோடும் உடல்மொழியில் 
இயங்குவதை காணலாம் 

அவன் பாடும் 
இந்த அற்புதப் பாடல்கள் 
அவன் தங்கைக்கோ 
தந்தைக்கோ 
தாயுக்கோ 
கேட்காது போனாலும் 
கேட்காமலே போகாது 

தூரங்கள் 
உடல்களை வேண்டுமானால் 
அந்நியப்படுத்தலாம் 
உள்ளங்களை ஒருபோதுமல்ல 

நானும் அவனும் 
தேநீர் அருந்தப் போகிறோம் 
அவர்களை உள்ளிறுத்தி 

அவன் பாடிய 
அந்தப் பாடல் 
இந்நேரம் 
அவர்களை எட்டியிருக்கும்
என நம்புவோமாக.. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔