தவறுகளின் நீட்சிகள்
பீடித்துக் கிடக்கும்
சொல்லெனா நீட்சிகொண்ட
தவறென்றப் பள்ளத்தில்
விரும்பி வீழ்கிறேன்
திரும்பத் திரும்ப
விழுகின்ற பொழுதெல்லாம்
வீணடி படுகிறார்
என்னோடு சிலர்
ஏதுமறியாது
எனைப்புரியாது
தவறி விழுகிறோமா
தள்ளி விழுகிறோமா
தனித்து யோசிக்கையில்
தவறியும் தள்ளியும்
விளையாடுகிறது விதி
ஊழ்வினை பொருட்டு
உள்வினைப் பொருட்டு
சரியும் தவறு
தவறும் சரி
காலத்தின் போக்கில்
எனத் தத்துவம் உதிர்க்கும்
தவறுகளின் நீட்சிகள்
தவிக்கின்றன தனிமையில்
எமப் பொழுதுகளில்
என்கைகள் சிக்காத தருணங்களில்
விளிம்பு கரையில்
ஒதுங்கி நிற்கும்
தயக்க என்னை
தவறாது இழுத்து
தம்பட்டமாய் மகிழ்கின்றன
சரியெனத் திரியும்
தவறுகளின் நீட்சிகள்
எனக்கும் மெய்க்காது
ஏனையோருக்கும் வாய்க்காது
மாற்றமோ ஏமாற்றமோ
எனக் குழப்பத்தில் கழிகிறது
கடந்ததில் ஆரம்பித்து
நிகழ்வில் தொடரும்
கண்ணிய வாழ்க்கை!.
Comments
Post a Comment