விடியல் வருமட்டும்
சுழலும் விசிறியின்
இறக்கைகளில் படிந்திருக்கிறது
கடந்தகாலத்தின் கசப்புகள்
கண்கசக்கும் தூசுகளாய்
ஒவ்வொருமுறை
சுழற்றும்போதும்
உதிர்க்கின்றன
நியாபகத்தின் எச்சங்களை
இருண்ட அறையின்
எங்கோ மூலையில்
ஒளிந்திருக்கக்கூடும்
நினைவின் அடுக்குகள்
கண்ணிறுக்கம்
கொள்ளும்போது
கட்டவிழ்த்து விழுகின்றன
தாங்கமுடியா கணங்களோடு
மரணமொட்டிய நிகழ்வுகள்
பயப்படும் கனவுகளாகையில்
இரவு காத்திருக்கிறது
விடியல் வருமட்டும்.!
En Appa ottadai adithu visiri thudaitthapothu nan paduthu kondum; paditthukkondum iruppathai Bavanai seitha Gnabagam; Indru nan vangia veetil ...nan ottadai adithu kondu....en magan andru nan seithathai seithukondu!. Suthamally Umahariharan
ReplyDeleteUn kavithai ovvondrum ennai...yum Yetho ezhutha thoondugirathu. nandri
ReplyDelete