தூக்கில் தொங்கும் காலம்
திரு நெல்வேலி மாவட்டத்தில்
தீரா! தாமிரபரணி நதிக்கரையில்
கொஞ்சம் விளைநிலமிருக்கிற
மிஞ்சிய குடும்பவழியன் நான்
அடிக்கடி நிகழும்
அசூர வியாபார உரையாடலில்
"அம்மா சொல்வாள்
எங்க ஆயுசுக்கும்
இருக்கட்டும்
அப்புறம் நீங்க என்னோவோ பண்ணிக்குங்க"
நேற்றைய தலைமுறைவரை
நெஞ்சுபிளந்து
விதைத்தபோதெல்லாம்
குஞ்சுமணியாவது
கொட்டிகுடுத்த
எங்கள் நிலமது
மனிதம் செத்த பொழுதில்
மணலள்ளி நதியின் துகிழுறித்தனர்
அதன்பால்
மழைப் பொய்த்து
அடிமடி அறுத்தனர்
எதிர்காலம் கருதி
ஏதேதோ படித்து
எங்கேயோ நகர்ந்து
எப்படி எப்படியோ வாழுகின்ற
விதைத்த தலைமுறையின்
விஞ்சிய நிழல்கள் நாங்கள்
வயலழித்து இடம் செய்து
வனமழித்து சட்டம் செய்து
விதையழித்து வீடாக்கி
வெள்ளைக்காரனுக்கு கூட்டிக்கொடுத்து
வென்றுவிட்டதாக எண்ணும்
நாமனைவரும்
நேற்றுத் தொங்கிய ஒருவன் போல
நித்தம்
தூக்கில் தொங்கும்
காலம் மட்டும்
தொலைவிலில்லை.
thoguthu nool vadivil veliyidalam.
ReplyDelete