கிளரிகள் :-



மனதின் ஆழத்தில்
புதைந்திருக்கும் உனது நினைவு
மறுபடி மறுபடி
கிளறப்படுகிறது
ஏதேனும் ஒரு கிளறி வாயிலாக

ஒரு போதும் கிளறி தேடி
அகப்படுவதில்லை நான்

கிளரியென்றறியாது
அகப்படுகையில்
கொஞ்சம் இன்பமும்
கொடுமையான பீறிடும்
துன்பமும் வாய்க்கின்றன

கிளரிகளிடம் எச்சரிக்கையாய்
இருக்க வேண்டும் நான்

கிளரிகள் எத்தகையன
எவ்வடிவுடையான
எத்திசையிலிருந்து வருவன
யார் யார் எய்வர்
என்கிற பிரஞ்கையின்றி
எங்கனம் தவிர்ப்பது?

கண்ணிவெடிகளை
கண்டறிய
கருவிகள் இருக்கலாம்
கன்னிகளால் வெடிக்கும்
வெடிகளை கண்டறிய
கருவிகள் இருக்கிறதா என்ன?!

அகப்பட்டு
அழல்வதுதான் விதியென்கையில். 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔