ரவா தோசை :-
இன்னைக்கு என்ன
டிபன் பண்ண
என்ற கடினக் கேள்வியோடு தான்
ஆரம்பிக்கும்
சனி, ஞாயிற்றுக் கிழமைகளின்
காலைப் பொழுதுகள்
பொங்கலை நாளைக்கு ஒதுக்கி
பொடிதோசை செய்வதென்று
நான், மனைவி, மகள், அம்மா,சகோதரர் என
ஐவர்குழு ஒப்புதலளித்து
செயல்கள் செவ்வனே
தொடங்கின
இடையில் பொடி இருப்பினை கருதி
பொடிதோசை ரவா தோசையானதில்
அடியேனுக்கு வாய்த்தது
அவசரகதியில்
கடைக்கு பயணிக்கும் கஷ்டம்
மைதா வாங்க!!
கொஞ்சம் உடைத்த மிளகும்,
நனைத்த ரவையும், மைதாவும் சேர
முந்திரியும், காரட்டும் மிதக்க
வந்தது ரவாதோசை
பி.கு. பார்க்க அழகாக!!
குளித்து பசித்த கதியில்
விழுங்க ஆரம்பித்திருந்த பொழுதில்
எப்படியிருக்கு தோசை??
தோசையை விட வேகமாக
விழுந்தது கேள்வி
என் தட்டில் மட்டும்
ம்ம்ம். நல்லாயிருக்கு
என்ற முடித்தவுடன்
சட்னி என்று அம்மா சொன்னதில்
என்ன புரிந்ததோ
ரவா தோசை
அடை தோசை கணத்தில்
வரத்தொடங்கியிருந்தது.!!
அருமை ரவா தோசையோ அடை தோசையோ நன்றாக இருந்ததா ?
ReplyDeleteThanks for comment.
Delete