அவ்வளவுக்கும் பிறகு :-




முன்சென்ற சீருந்து
உன்னை முன்னிருத்தியதில் 
ஆச்சர்யமில்லை
பின்பக்கம் காரணமாயிருக்கலாம்

சீருந்துகளை பெரும்பாலும்
ஆண்கள்தான்
வடிவமைக்கக் கூடும்
அமைப்புகள் பெண்வாடை
பேசுவதால்

பள்ளங்களற்ற சாலையில்
படபடவென ஓடுகிறது
பழுதடைந்திருக்கும் 
என்பதாலோ என்னவோ
உன்னை போலவே

எவ்வளவு முயன்றாலும்
சீருந்துகளை முந்துவது
சீக்கிரம் செயலாவதில்லை
அவைகளும் அவற்றை
விரும்புவதுமில்லை
இங்கேயும் உன்போலவே  

வேகமாகப் பின்தொடருகையில்
எதிர்பாரத்தருணத்தில்
இடப்புறமோ, வலப்புறமோ
சைகையின்றித் திரும்பி
தொடரமுடியா வேகத்தில்
தொலையும்

அனைத்து சீருந்துகளுக்கும்
உனக்கும் தொடர்பில்லை
என்று என்னால்
எவ்வாறு சொல்லமுடியும்?

அவ்வளவுக்கும் பிறகு. 

Comments

Post a Comment

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔