மூத்திர நாற்றம்
மூத்திர அவசரத்திலும்
முழுதாய் ஒரு கவிதை
பிரசவ வழியில்
பிதுங்கும் குழந்தைபோல்
மூத்திரமடக்குதல்
மூளையைப் பிதுக்குமென்பதால்
மூத்திரத்தை கோப்பையிலும்
முக்கிநின்ற கவிதையை
முளைத்த வலைப்பதிவிலும்
பெய்து வைத்தேன்
மூத்திரநாற்றத்துக்கு
மூக்குபிடித்த சிலர்
முக்கி ய கவிதைக்கும்
மூக்கு பிடித்தனர்
மூத்திர வாசத்திற்கு
ஜவ்வாது பூச
பிடிக்காத காரணத்தால்
கவிதைக்கும்
கலப்படம் செய்யவில்லை
யாரும் சீண்டாவிடினும்
கவிதையின் நாற்றம்
காற்றின்வழி எல்லோரின்
கன்னம் சீண்டும்
காதுகள் தோண்டும்
பிடிக்கவிடினும்
தவிர்க்க இயலா தெருவோர
மூத்திர நாற்றம் போல!!
Comments
Post a Comment