Posts

Showing posts from July, 2014

மர சொந்தம்

Image
மர சொந்தம்  :- வேனைக் கால பொழுது களில்  குருவிகள் கொத்தி  கொட்டிய அதன் விதைகள்   விழுங்கப்பட்டன  கப் ஐசும், குச்சி ஐசுமாக எங்களால்... பலகாலங்களில் பலமாக மட்டைப்பந்து  பயில பயன்பட்டிருக்கிறது  பசுமை நிழல்...   அவ்வப்போது  உறவு பூசல்களை  ஊமையாய் நின்று  கவனித்திருக்கிறது... மாமன், மச்சான்கள்  குடித்து உருண்டதுவும்  அத்தை மாமாக்கள்  அடித்துக் கொண்டதுவும்  அடியில் நிகழ்ந்திருக்கின்றன... கூடிக்களித்தக்  குடும்பங்கள் நாடோட  தனித்திருந்த சோகத்தில்  தன்மை இழந்து  தனித்திருந்தன ஒரு வருடம்  என்றுமில்லாதவாறு... அடுத்த கோடைக்கு  அதன் அடிமடி தேடி  ஆனந்தமாய் போகையில்  வெட்டி விறகாக்கி இருந்தது  வாழ வழியில்லாத  வறுமை சொந்தம்  இரண்டு தலைமுறைப்பார்த்த   இனிய மர சொந்தமதனை... எனது தலைமுறைக்கு  எதைக்காட்டி அறிமுகப்படுத்த  இதுதான்  எங்கள் புண...

நடப்பு

Image
நடப்பு :- கொழுப்பினை குறைக்க - மழை  கொட்டிய வீதிகளில்  நடந்து கொண்டிருந்தேன்... கால்களின்  களைப்பை தவிர்க்க  காதுகளில் பாடல்  ஒலிக்கவில்லை... உடன்வந்து  உரையாட  உற்றத் துணை  ஏதுமில்லை... வானம்பார்த்து  விழிகள் வியக்க  வெளிச்சமது  இல்லவேயில்லை... கணங்கள் உருண்டதில்  கவனம் கொள்ளாது  வியர்வை வழிய  வீதிகளெல்லாம்  கடந்து நடந்து வந்துவிட்டேன்  காதல் உன்னைமட்டும்  உள்ளமதின்  உள்ளேதாங்கி.
Image
மீசைக்கார நண்பா :- மீசை தமிழக ஆண்களின் தகுதிக் குறியீடு. வேலை நிமித்தமாக வடக்கே செல்லும் போதெல்லாம் வழவழவென சவரம் செய்த முகங்களை பார்க்கும் போது ஆற்றங்கரையில் துவைக்கப் போட்டிருக்கும் வெள்ளை சீனிக்கல் நியாபகம் வரும்.ஆண்கள் மீசை வைப்பதே ஆரோக்கியமற்ற குறியீடாக கருதிவந்த குடும்ப பாரம்பரியம் என்னது. நான் சிறுவயதில் பார்த்த என்னுடைய எல்லா தாத்தாக்களும் ஏனைய உறவு ஆண்களும் மீசை வைத்திருந்தது இல்லை வெகுசிலரைத் தவிர. "மீசை நமக்கு அழகில்ல' என்று இன்றும் எனது அம்மா கூறுவதிலிருந்து மீசை குறித்த எனது குடும்ப பெண்களின் மனநிலையினை  கொள்ளலாம். கொஞ்சம் பெரிதாக மீசை வைத்திருந்த எனது மாமாவை "ரவுடிப்பய,பெரிய இவன்னு நெனைப்பு"  என்று அவர் காது படாமல் எங்களிடத்தில் திட்டுவார் எங்கள் அப்பா தாத்தா. அவர் காவல் துறையில் பணிபுரிந்த போதும் காவல் துறையின் தார்மீக அடையாளமாக கருதப்படும் மீசையினை அவர் வைத்துக்கொண்டதே இல்லை. அவருக்கு மெல்லிசாக தாடையில் முடிவளர்ந்து நான் பார்த்ததேயில்லை அவர் இறக்கும் தருணம் தவிர்த்து. தினமும் அதிகாலையில் எழுந்து முகச்சவரம் செய்வதை ஒரு தினக்கடனாக அவர...

பின்னட்டை அழகி

Image
பின்னட்டை அழகி :- வாரந்தோறும் வாசிக்கின்ற  வார இதழின் இந்த வார  பின்னட்டை அழகி உன்னை ஒத்திருக்கிறாள்... அவள் கட்டிய புடவையின் கலைந்த மடிப்பு என்றோ உன்னை புடவையில் பார்த்த நியாபகங்களை கலைக்கிறது.... அவள் காலில் அணிந்திருக்கும் காலணி உன் ரசனையை சார்ந்தே இருக்கிறது... கைகளை வைத்திருக்கும் விதமும் விரல்களின் நீட்சியும் நகங்களின் கூர்மையும் அவள் உன் வம்சத்தவளோ என்ற ஐயப்பாட்டினை எழுப்புகின்றன... அவள் காதணியும் கழுத்தணியும் வளவிகளும் இன்னபிற ஆபரணங்களெல்லாம் உன் அலமாரியின் உள்ளிருந்து எடுத்தணிந்தவை போலுள்ளன... அவள் மூக்கினை லேசாக வளைத்தால் அநேகமாக அவள் நீயாகும் அற்புதம் நிகழும். 

வெள்ளையடித்த வீடு

Image
வெள்ளையடித்த வீடு :- உயரத்திலிருந்த எல்லாம் தரையில் பரத்தப்பட்டிருந்தன... சமையலறை உணவருந்தும் அறைக்கு வந்தது உணவருந்தும் அறை உள்ளறைக்கு வந்திருந்தது உறங்கும் அறையினை இன்னும் உத்தேசிக்கவில்லை... மொட்டை மாடியில் கழுவி, காயவைக்கப்பட்டிருந்தன அதிகம் பார்க்காத அன்று மட்டும் பார்த்த அத்தனை சீர்பாத்திரங்களும்... அண்டைவீட்டார் அடிக்கடி வந்து அளந்து கொண்டு அலைந்தார்கள் எங்கள் வீட்டின் அழகை தங்கள் வீட்டோடு... சுவற்றின் வண்ணம் மாறியதிலும் சுற்றிலும் வாசம் கூடியதிலும் எல்லோரும் மகிழ்வில் இருந்தார்கள்... ஈராண்டு அவள் வரைந்த கிறுக்கல் ஓவியங்களும் என்றோ கூடலில் பதிந்திருந்த எண்ணைக் கறைகளும் மறைந்த வருத்ததிலிருந்த என்னைத்தவிர.

கோமணம் கட்டியவன்

Image
கோமணம் கட்டியவன் :-  கொந்தளித்த கடலாய் கடந்திருந்தது இரவு அடங்கி வற்றிய ஆழியாய் விடிந்திருந்தது பகல் இன்று... நேற்று நீ நிறைய பேசியிருந்தாய் நானுந்தான் நீ என்னைப்பற்றி என்னிடமல்லாது நான் உன்னைப் பற்றி என்னிடம் மட்டும்... நேற்றைய மாலையில் நான் அழவேண்டாம் என்று சொல்வதற்க்காக கொஞ்சம் மழை பெய்திருந்தது மழை மறைந்திருந்த இரவில் நான் கொஞ்சம் அழுதிருந்தேன் எனக்கே தெரியாதவாறு... என்றோ புரிந்த என்னை நீ நானாக முடிவு செய்திருந்தாய் அந்த நான் பழைய நான் என்பதை சொல்லவே வாய்ப்பளிக்காத நீதான் புதிய நீ... உன் வெளிவட்டம் அலங்காரங்கள் மிகுந்தது அறிவுத்தனம் நிரம்பியது ஆச்சர்யம் அழிக்கக்கூடியது நீ வெளிவட்டத்தில் அமானுஷ்யமாகவும் அறிவிற்சிறந்தும் இருப்பினும் உன் அகமாகிய உள்வட்டம் பயத்தால் பீடித்திருக்கிறது அறிவின்மையின் ஆதி நிழலாய் பேதமையின் பெரும்பொருளாய் ஒளியின்றி இருண்டுகிடக்கிறது அதை பெரும்பாலும் மறைத்து ஏமாறுதல் இயல்பு உனக்கு... நான் அங்கேயே இருந்திருக்க வேண்டும் உள்வந்தது நான் அறியாது நீ அறிந்தே நிகழ்ந்தது... தலையில் எரியும் ஒளிவிளக்கின் வெளிச்சத்திற்க்காக தலையே இழந்துத் திரிகிறாய் நீ நீ மட்ட...

நீ

Image
நீ:- ஆர்ப்பரித்து அலைகளை கரை கடக்கச் செய்து சேதம் விளைவித்தாய் நேற்று நீ!!! அமைதியாய் கால்கள் நனைத்து காதல் பெருக்குகிறாய் இன்றும் வேறொரு நீ..

அடுக்கக அலம்பல்

Image
அடுக்கக அலம்பல் :-  :- கீழ் வீட்டில் இரண்டு நாட்களாக துக்கம் அனுஷ்டிக்கிறார்கள் தொடர்ந்து இரண்டு மரணம்  இரண்டு வாரங்களில்... இழவுக்கு வந்தக் கூட்டம் குடித்து குளித்து குடிக்க தண்ணியே இல்லாது பண்ணிட்டு முதல் வீட்டு முதலியார் அம்மா... கோலம் போடாததைக் கேட்கப் போனால் "எல்லார் வீட்டிலும் தான் இழவு விழும்" என்று காவலாளி அம்மா கடுப்பில் சொன்னதாய் கண்ணீர் விட்டதது வயதான கணவரை வாஞ்சையாய் நினைத்து கீழ்வீட்டு ஆசாரிஅம்மா... சரியான வசதிகள் சாமர்த்தியமாய்த் தாராமல் சமயோசிதமாக வாடகையேற்றி சாகடிக்கிறார் வீட்டின் உரிமையாளர் கவிதைகாரனின் மனைவி!!!... பக்கத்து வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் எதிர்த்தவீட்டு அம்மா எங்க கொடியில் துணியைக் காயப்போட்டுவிட்டது ஏழாவது வீட்டு இளம் ஆச்சி ... மேல் வீட்டில் சுத்தமே இல்லை எப்பவுமே ஒரு கவிச்சி வாசனை... வெள்ளி செவ்வாகூட வெளியில தலைகாட்ட முடியல இது கீழ் வீட்டு அய்யர் அம்மா... வாட்ச்மேன் நைட்டு ஒட்டு துணியில்லாமல் வாசலில் உறங்குகிறார் இது குடியிருக்கிற இடமா இல்ல கூத்தியா குடியா??? மனுஷன் இருக்கிற மாத...

அன்பிற்க்கு பயப்படுதல்

Image
அன்பிற்க்கு பயப்படுதல்   :- எதையாவது எங்காவது தூக்கி எறிகையிலும்  கண்டபடி எங்காவது போடுகையிலும் "யாரு இங்க இதை போட்டாப்பா" என்ற அதட்டல் குரலில் அவள் கேட்கையில் ஆனந்தமாய் உணருகிறேன் முதன்முதலாய் அன்பிற்க்கு பயப்படுதலை.

காதல் வேதியியல்

Image
காதல் வேதியியல் :- நீ அவளை காதலிக்கிறாயாமே என்றாள் இவள் நீ என்னை ஏன் காதலிக்கிறாய்  என்றாள் அவள் நான் யாரையும் காதலிக்கவில்லை பிட்யூட்டரியும் பிறகு அதன் சுரப்பான டெஸ்ட்ரோஜனும் என் வழியாக அவர்கள் இணையினைத் தேடுகிறார்கள் ஹார்மோன்கள் கலகம் செய்ய நான் ஏன் கைதாக வேண்டும் என்றேன் நான்!!!!

மழையும் நீயும்

Image
மழையும் நீயும் :- திடீர் திடீர்  என மழை வருகிறது  இந்நாட்களில்  திடீர் திடீர்  என வருகிற உன் நியாபகம் போல... பொழிகிற மழையை  உற்று கவனித்தேன்  உன்னை கவனிப்பதைப் போலவே... விட்டு விட்டு  பொழிகிறது மழை   விட்டு விட்டுப்   என்னைப் பார்க்கிற  உன் திருட்டுப்பார்வை போல... முதலில்  அசுர வேகத்தில்  அழுத்துகிறது நிலத்தை  நிலம் எதிர்க்க  எத்தனிக்கையில்  அன்பாய் அழுத்தம்  குறைக்கிறது  உன் பார்வையும் இப்படித்தான்... முடிவில்  இன்னும் பொழியாதா  என நிலம்  ஏங்கத் துவங்கையில்  பொழிப்பை நிறுத்தி  போய்விடுகிறது மழை பல்லிழித்துக்கொண்டு உன்னைப்போலவே.

வேண்டுதல்

Image
வேண்டுதல் :- அப்பா காப்பாத்து  அம்மா காப்பாத்து ஆச்சி காப்பாத்து தாத்தா காப்பாத்து அக்கா காப்பாத்து அண்ணன் காப்பாத்து சித்தி காப்பாத்து சித்தப்பா காப்பாத்து தேதே காப்பாத்து பொம்மு காப்பாத்து மியா காப்பாத்து என  கைகள் குவித்து  கண்கள் மூடி  வேண்டிக்கொண்டிருந்தாள்  இறைவனிடம்  அவளது  மூடிய கண்கள்  திறக்கும் கணங்களுக்குள்  முன்னின்று வேண்டிக்கொண்டிருந்தான்  தன்னையும் காப்பாத்த வேண்டி  தலைவனான இறைவன். 

காரணம்

Image
காரணம்:- உனக்கு காதல் வராமைக்கு ஓராயிரம் காரணம் சொன்னாய். எனக்கு காதல் வந்தமைக்கு  ஒரு காரணமாவது உன்னிடத்தில் சொல்லிவிட முயலுகிற என்னை பார்த்து சிரித்து விட்டு காதல் சொன்னது.. நீ காதல் வந்தமைக்கு காரணம் தேடுவது.. கடவுள் வந்தமைக்கு காரணம் தேடுவது போல முடிந்தால் கண்டுபிடி பார்க்கலாம் என்று...

வேலையற்றவனின் காதல்

Image
வேலையற்றவனின் காதல் :- பொழுது புலர்ந்து பல மணித்துளிகளுக்கு பிறகுதான்  கண் விழிக்கின்றேன் .. படுக்கை பானம் அருந்தி பல்விலக்குவதட்குள் பாதி பகல்பொழுது முடிந்து விடுகிறது... காலை உணவா? இல்லை நேரடி மதிய உணவா? - என யோசித்து உண்டு, உறங்கி எழுகையில் முக்கால் நாளும் முடிந்து விடுகிறது... இடையில் சில புத்தக புரட்டல்கள், அலைபேசி உரையாடல்கள் என முடிகிறது மாலையும், கருக்கலும்.. தொலைக்காட்சி பார்த்தும் உறவுகளோடு உரையாடியும் இரவு உணவோடு முடிந்து கழிகின்றன என் வேலையற்ற பொழுதுகள்.. நித்தம் நித்தம் நிகழ்கின்ற இத்தகைய நிகழ்வுகளிலும் ஒற்றை நிமிடம் கூட கழிந்ததில்லை அருகிலில்லாத உன் நினைவுகளின்றி