வெள்ளையடித்த வீடு

வெள்ளையடித்த வீடு :-



உயரத்திலிருந்த எல்லாம்
தரையில் பரத்தப்பட்டிருந்தன...


சமையலறை உணவருந்தும்

அறைக்கு வந்தது
உணவருந்தும் அறை
உள்ளறைக்கு வந்திருந்தது
உறங்கும் அறையினை
இன்னும் உத்தேசிக்கவில்லை...

மொட்டை மாடியில்
கழுவி, காயவைக்கப்பட்டிருந்தன அதிகம் பார்க்காத
அன்று மட்டும் பார்த்த
அத்தனை சீர்பாத்திரங்களும்...



அண்டைவீட்டார்
அடிக்கடி வந்து
அளந்து கொண்டு
அலைந்தார்கள்
எங்கள் வீட்டின் அழகை
தங்கள் வீட்டோடு...


சுவற்றின்
வண்ணம் மாறியதிலும்
சுற்றிலும்
வாசம் கூடியதிலும்
எல்லோரும் மகிழ்வில்
இருந்தார்கள்...

ஈராண்டு அவள்
வரைந்த கிறுக்கல்
ஓவியங்களும்
என்றோ கூடலில்
பதிந்திருந்த எண்ணைக்
கறைகளும் மறைந்த
வருத்ததிலிருந்த
என்னைத்தவிர.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔