வேண்டுதல்
வேண்டுதல் :-
அப்பா காப்பாத்து
அம்மா காப்பாத்து
ஆச்சி காப்பாத்து
தாத்தா காப்பாத்து
அக்கா காப்பாத்து
அண்ணன் காப்பாத்து
சித்தி காப்பாத்து
சித்தப்பா காப்பாத்து
தேதே காப்பாத்து
பொம்மு காப்பாத்து
மியா காப்பாத்து
என
கைகள் குவித்து
கண்கள் மூடி
வேண்டிக்கொண்டிருந்தாள்
இறைவனிடம்
அவளது
மூடிய கண்கள்
திறக்கும் கணங்களுக்குள்
முன்னின்று
வேண்டிக்கொண்டிருந்தான்
தன்னையும் காப்பாத்த வேண்டி
தலைவனான இறைவன்.
Comments
Post a Comment