பின்னட்டை அழகி

பின்னட்டை அழகி :-



வாரந்தோறும் வாசிக்கின்ற 
வார இதழின்
இந்த வார 
பின்னட்டை அழகி
உன்னை ஒத்திருக்கிறாள்...

அவள் கட்டிய
புடவையின் கலைந்த மடிப்பு
என்றோ உன்னை
புடவையில் பார்த்த
நியாபகங்களை கலைக்கிறது....

அவள் காலில்
அணிந்திருக்கும் காலணி
உன் ரசனையை
சார்ந்தே இருக்கிறது...

கைகளை
வைத்திருக்கும் விதமும்
விரல்களின் நீட்சியும்
நகங்களின் கூர்மையும்
அவள் உன் வம்சத்தவளோ
என்ற ஐயப்பாட்டினை
எழுப்புகின்றன...

அவள்
காதணியும்
கழுத்தணியும்
வளவிகளும்
இன்னபிற
ஆபரணங்களெல்லாம்
உன் அலமாரியின்
உள்ளிருந்து எடுத்தணிந்தவை
போலுள்ளன...

அவள் மூக்கினை
லேசாக வளைத்தால்
அநேகமாக அவள்
நீயாகும் அற்புதம் நிகழும். 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔